(111)

(111)

நாந்தக மேந்திய நம்பி சரணென்று

தாழ்ந்த தனஞ்சயற் காகி தரணியில்

வேந்தர்க ளுட்க விசயன் மணித்திண்தேர்

ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்.

பதவுரை

நாந்தகம்

நந்தகம் என்னும் வாளை
ஏந்திய

கையிலணிந்துள்ள
நம்பி

பெரியோனே!
சாண்

(நீ எனக்கு) ரக்ஷகன்
என்று

என்று சொல்லி
தாழ்ந்த

(தன்னை) வணங்கிய
தனஞ்சயற்கு ஆகி

அர்ஜுநனுக்குப் பக்ஷபாதியாயிருந்து
தரணியில்

இப்பூமியிலே
வேந்தர்கள்

(எதிரிகளான) ராஜாக்கள்
உட்க

அஞ்சிக்கலங்கும்படி
விசயன்

அந்த அர்ஜுநனது
மணி திண் தேர்

அழகியவலியதேரை
ஊர்ந்தவன்

(ஸாரதியாயிருந்து) செலுத்தின இவன்

என்னை புறம்புல்குவான்-;

உம்பர்

நித்யஸூரிகளுக்கு
கோன்

நிர்வாஹகனான இவன்

என்னை புறம் புல்குவான்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – நாந்தகம் = ‘நந்தகம்‘ என்ற வடசொல் நீண்டுகிடக்கிறது.  நம்பி.  உயர்திணை ஆண்பாற் சிறப்புப்பெயர்; “நம்பி ஆடூஉ விடலை கோவேள் குரிசில் தோன்றல் இன்னன ஆண்பெயராகுமென்ப” என்பது நன்னூல்.  சரண்.  ‘சரணம்’ என்ற வடசொற் சிதைவு.  தனஞ்சயன் – அர்ஜுநனுக்குமறுபெயர்.  இது தர்மபுத்ரன் ராஜஸுயயாகம் செய்யக் கோலினபோது பலராஜாக்களையும் வென்று மிக்க பொருளைக் கொணர்ந்ததனாலும் வெற்றியையே செல்வமாக வுடையவனென்ற காரணத்தாலும் வந்த பெயராம்.  தரணி – பரணி .  உட்க (நெஞ்சு) உளுக்கும்படியாக; மணித்தேர் மணிகளமைத்துச் சமைத்ததேரென்றுமாம்.  உம்பர் – மேலுலகு; அங்குள்ளார்க்கு ஆகுபெயர்.

English Translation

When Dhananjaya knelt saying “O Lord wielding the Nandaka dagger, my refuge!” the Lord drove Arjuna’s mighty chariot in the battlefield and felled many kings victoriously.  He will embrace me from behind, the Lord of gods will embrace me from behind.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top