(113)
சத்திர மேந்தித் தனியொரு மாணியாய்
உத்தர வேதியில் நின்ற ஒருவனை
கத்திரியர் காணக் காணிமுற்றும்கொண்ட
பத்திராகாரன் புறம்புல்குவான் பாரளந் தான்என் புறம்புல்குவான்.
பதவுரை
| உத்தரவேதியில் நின்ற |
– |
உத்தரவேதியிலிருந்த |
| ஒருவனை |
– |
(ஔதார்யத்தில்) அத்விதீயனான மஹாபலியினிடத்திலே |
| சத்திரம் |
– |
குடையை |
| ஏந்தி |
– |
(கையில்) பிடித்துக்கொண்டு |
| தனி |
– |
ஒப்பற்ற |
| ஒரு மாணி ஆய் |
– |
ஒரு ப்ரஹ்மசாரி வாமகனாய் (ப்போய்) |
| கத்திரியர் |
– |
(அவனுக்குக் கீழ்ப்பட்ட) க்ஷத்ரியர்கள் |
| காண |
– |
பார்த்துக் கொண்டிருக்கையில் |
| காணி முற்றும் |
– |
உலகம் முழுவதையும் |
| கொண்ட |
– |
(நீரேற்றளந்து) தன்னதாக்கிக் கொண்ட |
| பத்திரம் |
– |
விலக்ஷணமான |
| ஆகாரன் |
– |
வடிவையுடையனான இவன் |
|
புறம்புல்குவான்-; |
||
| பார் |
– |
பூமியை |
| அளந்தான் |
– |
(திரிவிக்கிரமனாய்) அளந்த இவன் |
|
என் புறம் புல்குவான்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – சத்திரம் – ?? என்ற வடசொல் திரிபு. உத்தரவேதி – ஆஹா நீயாக்ஙக்கு வடதிசையிலே யாக்பசுவைக் கட்டுகின்ற யூபஸ்தம்பத்தை காட்டியன் வேதிகை; இச்சொல் இங்கு யாகபூமியைக் காட்டுமென்க. சத்திரியர் -க்ஷதிய என்ற வடசொற்ரிபு. (‘சத்திரிவர்’ என்பது சிலர் பாடம்) பத்திராகாரன் –
English Translation
The Lord approached the sacrificial altar as a beautiful manikin with an umbrella in hand and all auspicious features; he measured and took the earth and all else from Bali, beheld by the assembled kings. He will come and embrace me from behind.
