(108)

(108)

வட்டு நிடுவே வளர்கின்ற மாணிக்க

மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தேபோல்

சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிக்கஎன்

குட்டன்வந்து என்னைப் புறம்புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்.

பதவுரை

என் குட்டன்

–

என் பிள்ளை
வட்டு நிடுவே

–

(இரண்டு நீலரத்ந) வட்டுகளின் நிடுவே
வளர்கின்ற

–

வளர்த்துக் கொண்டிருப்பதான
மாணிக்கம் மொட்டு

–

இந்திர நீலமயமான அரும்பினுடைய
நுனையில்

–

நுனியில்
முளைக்கின்ற

–

உண்டாகின்ற
முத்தேபோல்

–

முத்தைப்போல
சொட்டுசொட்டு என்ன

–

சொட்டுச்சொட்டென்ற ஓசையுண்டாகும்படி

(அம்மாணிக்க மொட்டு)

துளிர்க்க துளிர்க்க

–

பலதரம் துளியாநற்க
வந்து

–

ஓடிவந்து
என்னை

–

என்னுடைய
புறம்

–

முதுகை
புல்குவான்

–

கட்டிக்கொள்வான்;

கோவிந்தன் என்னை புறம்புல்குவான்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – ‘வட்டு நிடுவே வளர்கின்ற மாணிக்க மொட்டு’ என்றது – கண்ணபிரானது குறியை யென்க.  (குறி – ???  தவயவம். ) நிறத்தாலும்  ஆகாரத்தாலும் உவமை.  ‘முளைக்கின்ற முத்து’ என்றது – அதில் நன்று வெளிவருகிற சிறுநீரை.  உபமேயத்தைச் சொல்லாது உபமாநத்தை மாத்திரம் சொல்லி அதனால் உபமேயத்தைப் பெறவைத்தது – இடக்கரை அடக்கவேணுமென்ற கருத்தினாற்போலுமென்ப.  சிறுநீர்த் துளிகள் இற்று இற்று மீண்டும் வருதலால் ‘சொட்டுச் சொட்டெனத் துளிக்கத் துளிக்க’ என்றார்.  என்னை – உருபு மயக்கம்.  புல்குவான் – அணைத்துக் கொண்டபடியைச் சொல்லுகிறது; இனி ‘அணைத்துக் கொள்வானாக’ என்று விரும்பினதாகவுங் கொள்ளலாம்.

English Translation

Like a jewel bud between two balls, his pensile organ dripping with piss, my little one will come and embrace me from behind, my Govinda will embrace me from behind.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top