(107)

(107)

நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை

அச்சோ வருகவென்று ஆய்ச்சயு ரைத்தன

மச்சணி மாடப் புதுவைகோன் பட்டன்சொல்

நச்சலும் பாடுவார் நீள்விசும் பாள்வரே.

பதவுரை

நச்சுவார் முன்

(தன்னை) விரும்பிப்ப பக்தி பண்ணுமவர்களுடைய முன்னே
நிற்கும்

வந்து நிற்குந் தன்மையுள்ள
நாராயணன் தன்னை

நாராயணனாகிய ஸ்ரீ க்ருஷ்ணனை
ஆய்ச்சி

இடைக்குலத்தவளான யசோதை

(அணைத்துக் கொள்ளுகையிலுண்டான விருப்பந் தோன்றும்படி)

அச்சோ வருக என்று உரைத்தன

‘அச்சோ வருவாயாக’ என்று சொன்னவற்றை
மச்சு அணி

பல நிலைகளால் அழகிய
மாடம்

மாளிகைகளையுடைய
புதுவை

ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
கோன்

நிர்வாஹகரான
பட்டன்

பெரியாழ்வார்
சொல்

சொன்ன இப்பத்துப் பாசுரங்களையும்
பாடுவார்

பாடுபவர்கள்
நிச்சலும்

எப்போதும்
நின் விசும்பு

பரமாகாசமாகிற பரமபதத்திற்கு
ஆள்வர்

நிர்வாஹகராவர்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – முன்பு யசோதைப் பிராட்டிக்குக் கண்ணெதிரே நின்று கண்ணபிரான் எப்படி ஸேவை தந்தருளினனோ அப்படியே இப்போது தமக்கும் ப்ரயக்ஷமாக ஸேவை தந்தருளினதுபற்றி “நச்சுவார் முன்றிகும் நாராயணன்” என்றார்.

அடிவரவு:- பொன் செங்கமலம் பஞ்சவர் ஊறிய கழல் போர்மிக்க என்னிது கண் துன்னிய நிச்சு வட்டு.

English Translation

These words of high mansioned Puduvai town’s king Pattarbiran recall the “Acho-come-to-me” songs of Yasoda addressed to Narayana who appears before loving devotees.  Those who sing it always will rule over the wide skies.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top