(109)

(109)

கிங்கிணி கட்டிக் கிறிகட்டி கையினில்

கங்கண மிட்டுக் கழுத்தில் தொடர்கட்டி

தன்கணத் தாலே சதிரா நடந்துவந்து

என்கண்ணன் என்னைப் புறம்புல்குவான் எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்.

பதவுரை

என் கண்ணன்

என் கண்ணபிரான்
கிண்கிணி

அரைச்சதங்கையை
கட்டி

கட்டிக்கொண்டும்
கிறி

சிறுப்பவள வடத்தை
கையினிலே

கையிலே
கட்டி

கட்டிக்கொண்டும்
கங்கணம்

தோள்வளையை
இட்டு

(தோள்களில்) சாத்திக்கொண்டும்
கழுத்தில்

திருக்கழுத்திலே
தொடர்

சங்கிலியை
கட்டி

அணிந்துகொண்டும்
தம்  கணத்தாலே

(இன்னுமணிந்து கொண்டுள்ள) திருவாபரணங்களின் திரளோடுங்கூட
சதிர் ஆ நடந்து வந்து

அழகாக நடந்து வந்து

என்னை புறம்புல்குவான்-;

எம்பிரான் என்னை புறம்புல்குவான் -.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – கங்கணம் – வடசொல்.  திருவாபரணங்களைச் சொல்லும் ப்ரகரணமாதலால் சொல்லப்படாதொழிந்த திருவாபரணங்களையுங் கூட்டித் ‘தம்ணம்’ என்றது.  கணம் – ???? என்ற வடசொல் திரிபு.   தன் கணத்தாலே என்று பாடங்கொண்டு தன்னுடைய கண்ணால் (என்னைக் கடாக்ஷித்துக் கொண்டு)  னினுமமையும்; இப்பொருளில் ‘கண்’ என்பது – மூன்றாம் வேற்றுமையுருபை ஏற்கும்போது அத்துச்சாரியை பெற்று வந்ததென வேண்டும்.

English Translation

Wearing bells on his ankles, bracelet on his wrist, bangles on his hands, choker on his neck, and heaps more, my beloved one will come stealthily from behind and embrace me from behind.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top