(90)

(90)

முன்னலோர் வெள்ளிப் பெருமலைக் குட்டன் மொடுமொடு விரைந்தோட

பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக் குட்டன் பெயர்ந்தடி யிடுவதுபோல்

பன்னி யுலகம் பரவியோ வாப்புகழ்ப் பலதே வனென்னும்

தன்நம்பி யோடப் பின்கூடச் செல்வான் தளர்நடை நடவானோ.

பதவுரை

முன்

–

முன்னே
நல்

–

அழகிய
ஓர்

–

ஒப்பற்ற
வெள்ளி பெருமலை

–

பெரிய வெள்ளிமலை பெற்ற
குட்டன்

–

குட்டி
மொடுமொடு

–

திடுதிடென்று
விரைந்து

–

வேகங்கொண்டு
ஓட

–

ஓடிக்கொண்டிருக்க,
பின்னை

–

(அந்தப் பிள்ளையின்) பின்னே

(தன் செருக்காலே அப்பிள்ளையைப் பிடிப்பதற்காக)

தொடர்ந்தது

–

தொடர்ந்ததுமாகிய
ஓர்

–

ஒப்பற்ற
கருமலை

–

கருநிறமான மலைபெற்ற
குட்டன்

–

குட்டி
பெயர்ந்து

–

தானிருக்குமிடத்தை விட்டுப் புறப்பட்டு
அடி இடுவது போல்

–

அடியிட்டுப் போவதுபோல, –
உலகம்

–

லோகமெல்லாங்கூடி
பன்னி

–

(தங்களாலான வரையிலும்) ஆராய்ந்து
பரவி

–

ஸ்தோத்ரஞ்செய்தும்
ஓவா

–

முடிவுகாணமுடியாத
புகழ்

–

கீர்த்தியையுடைய
பலதேவன் என்னும்

–

பலராமன் என்கிற
தன் நம்பி ஓட

–

தன்னுடைய தமையன் (முன்னே) ஓடிக்கொண்டிருக்க
பின் கூட செல்வான்

–

(அவனைப் பிடிக்க வேணுமென்ற எண்ணத்தினால் அவன்) பின்னே உடன் செல்பவனான இக் கண்ணபிரான்

தளர்நடை நடவானோ -.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – பலராமன் வெண்மை நிறமுள்ளவனாதலால், அவன் ஓடுதற்கு வெள்ளிமலையீன்ற குட்டியோடுவதையும், கண்ணன் கருநிறம் உள்ளவனாதலால் அவன் பின்னே தொடர்ந்தோடுதற்குக் கருமலையீன்ற குட்டி தொடர்ந்தோடுவதையும் உவமை குறித்தார்.  காரியம் காரணத்தை ஒத்திருக்கும் என்ற கொள்கையை அநுஸரித்து இங்ஙனருளிச் செய்தனரென்க.  நம்பி – ஆண்பாற் சிறப்புப்பெயர்.  இங்கு, தமையனென்ற பொருளைக்காட்டிற்று.  அன்றி, பலராமனுக்கு ‘தம்பி மூத்தபிரான்‘ என்று ஒரு பெயர் ஸம்ப்ரதாயத்தில் வழங்குதலால், அதன் ஏகதேசமாகிய ‘நம்பி‘ என்கிற வித்தால் அப்பெயர் முழுவதையும் குறித்தாருமாம்.  மொடுமொடு – நடக்கும்போது தோன்றும் ஒலிக்குறிப்பு;  விரைவுக்குறிப்புமாம்

English Translation

Like a boulder from a white mountain rumbling down with great speed and a boulder from a black mountain rolling behind it, a big brother called Baladeva, praised by the world without end, runs swiftly and the younger brother follows.  Is he going to come toddling now?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top