(91)

(91)

ஒருகா லில்சங்கு ஒருகாலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த

இருகா லும்கொண்டு அங்கங்கு எழுதினாற்போல் இலச்சினை படநடந்து

பெருகா நின்ற இன்பவெள் ளத்தின்மேல் பின்னையும் பெய்துபெய்து

கருகார்க்கடல்வண்ணன் காமர் தாதை தளர்நடை நடவானோ.

பதவுரை

கரு கார் கடல்வண்ணன்

–

மிகவும் கருநிறமுள்ள ஸமுத்ரம் போன்ற திருநிறமுடையவனும்
காமர் தாதை

–

காமதேவனுக்குப் பிதாவுமான இப்பிள்ளை,-
ஒரு காலில்

–

ஒரு பாதத்திலே
சங்கு

–

சங்கமும்
ஒரு காலில்

–

மற்றொரு பாதத்தில்
சக்கரம்

–

சக்கரமும்
உள் அடி

–

பாதங்களின் உட்புறத்திலே
பொறித்து

–

ரேகையின் வடிவத்தோடு கூடி
அமைந்த

–

பொருந்தியிருக்கப் பெற்ற
இருகாலும் கொண்டு

–

இரண்டு திருவடிகளினாலும்
அங்கு அங்கு

–

அடிவைத்த அவ்வவ்விடங்களிலே
எழுதினால் போல்

–

சித்திரித்ததுபோல
இலச்சினை பட

–

அடையாளமுண்டாம்படி
நடந்து

–

அடிவைத்து

(தனது வடிவழகைக் கண்டு)

பெருகாநின்ற

–

பொங்குகிற
இன்பம் வெள்ளத்தின் மேல்

–

ஆநந்தமாகிற ஸமுத்ரத்துக்கு மேலே
பி்ன்னையும்

–

பின்னும்
பெய்து பெய்து

–

(ஆநந்தத்தை) மிகுதியாக உண்டாக்கிக்கொண்டு

தளர்நடை நடவானோ -.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – கண்ணபிரானாகிய பிள்ளைக்குப் புருஷோத்தம சிஹ்நமாகிய சங்கசக்ரரேகைகள் உள்ளங்காலிலிருத்தலால் அத்தாள்களை வைத்து நடக்குமிடமெல்லாம் சங்கசக்ரத்தி துருவங்களை யெழுதினாற் போலாகின்றனவென்பது – முன்னிரண்டடியின் கருத்து.  “கரு கார் கடல்” என்பதற்கு – கரிய பெரிய கடலென்றும், கறுத்துக் குளிர்ந்த கடலென்றும், காளமேகம் போலவும் கடல் போலவுமென்றும் பொருள் கொள்ளலாம்.  இலச்சினை – லஷணம்.  கண்ணன் மந்மதனுடைய அம்சமாகிய ப்ரத்யும்நனுக்கு ஜநகனாகையால், காமர்தாதையாயினான்.  இவ்வடைமொழியால், கண்ணபிரானது அழகின் மேன்மை தொனிக்கும்.  தாதை – ‘தாதா‘ என்னும் வடசொல் விகாரம்.

English Translation

The dark ocean-hued Lord, Kamadeva’s  father, with the sole of his one foot etched with the conch-symbol and the other with the discus-symbol, leaves imprints wherever he places his foot, sending waves of lasting joy that rise over and over again, Is he come toddling now?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top