(89)

(89)

கன்னற் குடம்திறந் தாலொத் தூறிக் கணகண சிரித்துவந்து

முன்வந்து நின்று முத்தம் தரும்என் முகில்வண்ணன் திருமார்வன்

தன்னைப் பெற்றேற்குத் தன்வா யமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான்

தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர்நடை நடவானோ.

பதவுரை

கன்னல் குடம்

–

கருப்பஞ்சாறு நிறைந்த குடம்
திறந்தால்

–

பொள்ளல் வி்ட்டால் (அப்பொள்ளல் வழியாகச் சாறுபொசிவதை)
ஒத்து

–

போன்று
ஊறி

–

(வாயில் நின்றும் நீர்) சுரந்து வடிய
கணகண

–

கணகணவென்று சப்தமுண்டாகும்படி சிரித்து
உவந்து

–

ஸந்தோஷித்து
முன்வந்து நின்று

–

என் முன்னே வந்து நின்று
முத்தம் தரும்

–

(எனக்கு) முத்தங்கொடுக்கும் தன்மையுள்ளவனும்
என் முகில் வண்ணன்

–

எனது முகில்போன்ற திருநிறத்தையுடையவனும்
திரு

–

பெரியபிராட்டியார்
மார்வன்

–

மார்பிற் கொண்டுள்ளவனுமான இவன்
தன்னை பெற்றேற்கு

–

தன்னைப் பெற்ற எனக்கு
தன்

–

தன்னுடைய
வாய் அமுதம்

–

அதராம்ருதத்தை
தந்து

–

கொடுத்து
என்னை

–

(தன்னைப் பிள்ளையாகப் பெற்ற பாக்யத்தையுடைய) என்னை
தளிர்ப்பிக்கின்றான்

–

தழைக்கச்செய்கிறான்,
(இவன்)

–

தன் ஏற்றும்

–

தன்னோடு எதிர்க்கிற
மாற்றலர்

–

சத்ருக்களுடைய
தலைகள் மீதே

–

தலைகளின் மேலே (அடியிட்டு)

தளர்நடை நடவானோ.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – தன் வாயில் நின்றும் கரும்பு ரஸம்போல் இனிமையான நீர் வெளிப்பட்டு வடியும்படி சிரித்துக்கொண்டு வந்து எனக்கு முத்தங் கொடுக்கும் தன்மையுள்ளவன் கண்ணனென்பது – முன்னிரண்டடிகளின் கருத்து.  கணகண – வாய்விட்டுச் சிரிக்கும்போது உண்டாகின்ற ஒலிக்குறிப்பு.  இவன் நடக்கிற நடையழகுகண்டே சத்ருக்கள் சாகவேணுமென்பது ஈற்றடியி்ன் கருத்து.

English Translation

My cloud-hued Lord with Sri on his chest comes forward, giggles and gives me a     kiss; his spittle, flowing from his mouth like the froth over a can of sugarcane juice, makes me tremble.  Is he going to come toddling now, over the heads of those who oppose him?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top