(52)

(52)

மெய்திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும்

செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்

வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய்நின்றாள்

அய்யா அழேல்அழேல் தாலேலோ! அரங்கத் தணையானே தாலேலோ!!

பதவுரை

மெய்

–

திருமேனியிலே
திமிரும்

–

பூசுகைக்குரிய
நானம் பொடியோடு

–

கஸ்தூரி, கருப்பூரம், சந்தநம் முதலிய ஸூகந்தப் பொடிகளையும்
மஞ்சளும்

–

மஞ்சள்பொடியையும்
செய்ய

–

சிவந்ததாய்
தட

–

விசாலமாயுள்ள
கண்ணுக்கு

–

கண்களில் (சாத்த)
அஞ்சனமும்

–

மையையும்,(திருனெற்றியில் சாத்துகைக்கு)
சிந்தூரமும்

–

ஸிந்தூரத்தையும்
வெய்ய கலை பாகி

–

கொடிய ஆண்மானை வாஹமாகவுடைய துர்க்கையானவள்
கொண்டு

–

எடுத்துக்கொடு வந்து
உவளாய் நின்றாள்

–

அதோ இராநின்றாள்;
ஐயா

–

ஸ்வாமியான கண்ணனே!
அழேழ் அழேழ் தாலேலோ;
அரங்கத்து

–

ஸ்ரீரங்கத்திலே
அணையானே

–

(திருவனந்தாழ்வானைப்) படுக்கையாகவுடையவனே!
தாலேலோ.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

-***துர்க்காதேவியானவள் வாசனைப்பொடி முதலியவற்றைக் கொண்டு ஸமர்ப்பிக்க வந்திருக்கிறாளென்று சொல்லித் தாலாட்டுகின்றாள்.  துர்க்கைக்கு மான் வாஹனமாகையால் கலைப்பாகி எனப்பட்டது.  ‘பாகன்’ என்பதன் பெண்பால் பாகி என்பது; மானின்மேல் ஏறிக்கொண்டு அதனைச் செலுத்துபவள்.  கலா என்ற வடசொல் ‘கலை’ என ஐயீறாகத்திரிந்ததென்று கொண்டு நூற்கலைகளை நடத்துகிற ஸரஸ்வதி என்று பொருள்கொள்வதும் ஏற்கும்; இப்பொருளில் வெய்ய என்பதற்கு-விரும்பப்படுகின்ற என்று பொருள்.  இத்திருமொழியில் முதற்பாட்டில் பிரதானனாகப் பிரமதேவன் சொல்லப்பட்டபடியால் அவனுக்குப் பத்தினியான ஸ்ரஸ்வதியை இப்பாட்டிற் சொல்லிமுடிக்கிறதென்று கொள்வது மிகவுமிணங்கும்.

English Translation

The deer-riding-goddess Parvati stands betwixt, with gifts of refreshing bath-fragrance and turmeric powder, collyrium for your large lotus eyes and vermillion power.  O, Sir don’t cry, don’t cry, Talelo.  Lord reclining on a serpent in Tiru-Arangam, Talelo.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top