(52)
மெய்திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும்
செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய்நின்றாள்
அய்யா அழேல்அழேல் தாலேலோ! அரங்கத் தணையானே தாலேலோ!!
பதவுரை
| மெய் |
– |
திருமேனியிலே |
| திமிரும் |
– |
பூசுகைக்குரிய |
| நானம் பொடியோடு |
– |
கஸ்தூரி, கருப்பூரம், சந்தநம் முதலிய ஸூகந்தப் பொடிகளையும் |
| மஞ்சளும் |
– |
மஞ்சள்பொடியையும் |
| செய்ய |
– |
சிவந்ததாய் |
| தட |
– |
விசாலமாயுள்ள |
| கண்ணுக்கு |
– |
கண்களில் (சாத்த) |
| அஞ்சனமும் |
– |
மையையும்,(திருனெற்றியில் சாத்துகைக்கு) |
| சிந்தூரமும் |
– |
ஸிந்தூரத்தையும் |
| வெய்ய கலை பாகி |
– |
கொடிய ஆண்மானை வாஹமாகவுடைய துர்க்கையானவள் |
| கொண்டு |
– |
எடுத்துக்கொடு வந்து |
| உவளாய் நின்றாள் |
– |
அதோ இராநின்றாள்; |
| ஐயா |
– |
ஸ்வாமியான கண்ணனே! |
| அழேழ் அழேழ் தாலேலோ; | ||
| அரங்கத்து |
– |
ஸ்ரீரங்கத்திலே |
| அணையானே |
– |
(திருவனந்தாழ்வானைப்) படுக்கையாகவுடையவனே! |
| தாலேலோ. | ||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
-***துர்க்காதேவியானவள் வாசனைப்பொடி முதலியவற்றைக் கொண்டு ஸமர்ப்பிக்க வந்திருக்கிறாளென்று சொல்லித் தாலாட்டுகின்றாள். துர்க்கைக்கு மான் வாஹனமாகையால் கலைப்பாகி எனப்பட்டது. ‘பாகன்’ என்பதன் பெண்பால் பாகி என்பது; மானின்மேல் ஏறிக்கொண்டு அதனைச் செலுத்துபவள். கலா என்ற வடசொல் ‘கலை’ என ஐயீறாகத்திரிந்ததென்று கொண்டு நூற்கலைகளை நடத்துகிற ஸரஸ்வதி என்று பொருள்கொள்வதும் ஏற்கும்; இப்பொருளில் வெய்ய என்பதற்கு-விரும்பப்படுகின்ற என்று பொருள். இத்திருமொழியில் முதற்பாட்டில் பிரதானனாகப் பிரமதேவன் சொல்லப்பட்டபடியால் அவனுக்குப் பத்தினியான ஸ்ரஸ்வதியை இப்பாட்டிற் சொல்லிமுடிக்கிறதென்று கொள்வது மிகவுமிணங்கும்.
English Translation
The deer-riding-goddess Parvati stands betwixt, with gifts of refreshing bath-fragrance and turmeric powder, collyrium for your large lotus eyes and vermillion power. O, Sir don’t cry, don’t cry, Talelo. Lord reclining on a serpent in Tiru-Arangam, Talelo.
