(53)
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட
அஞ்சன வண்ணனை ஆய்ச்சிதா லாட்டிய
செஞ்சொல் மறையவர் சேர்புதுவைப் பட்டன்சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்தானே.
பதவுரை
| வஞ்சனையால் வந்த |
– |
வஞ்சகவேஷத்தொடே வந்த |
| பேய்ச்சி |
– |
பூதனையினுடைய |
| முலை உண்ட |
– |
முலையை அமுது செய்தவனாய் |
| அஞ்சனம் வண்ணனை |
– |
மைபோன்ற நிறத்தையுடையவனான கண்ணபிரானை |
| ஆய்ச்சி |
– |
யசோதைப்பிராட்டி |
| தாலாட்டிய |
– |
தாலாட்டினபடிகளை |
| செம் சொல் மறையவர் |
– |
செவ்விய சொற்கள் நிறைந்த வேதங்களில் வல்லவரான ஸ்ரீவைஷ்ணவர்கள் |
| சேர் |
– |
நித்யவாசம்பண்ணப்பெற்ற |
| புதுவை |
– |
ஸ்ரீவில்லிபுத்தூரிலவதரித்த |
| பட்டன் |
– |
பெரியாழ்வார் (அருளிச்செய்த) |
| சொல் |
– |
இப்பாசுரங்கள் |
| எஞ்சாமை |
– |
குறைவுபடாமல் |
| வல்லவர்க்கு |
– |
ஓத வல்லவர்க்கு |
| இடர் இல்லை |
– |
துன்பம் ஒன்றுமில்லையாம். |
|
தான் ஏ – அசை |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – கண்ணபிரானைத் தொட்டிலிற் கண்வளர்த்தித் தாலாட்டாக யசோதைப்பிராட்டி அன்று சொன்ன பாசுரங்களை உட்கொண்டு நான் இத்திருமொழி பாடினேன்; இதை நின்றாகக் கற்பவர்கள் ஒருவகைத் துன்பமுமடையாமல் நித்யாநிந்தம் பெறுவரென்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று. தாலாட்டிய என்றது விசேஷணமன்று. இறந்தகாலப் பலவின்பால் வினையாலணையும் பெயர். இரண்டாம் வேற்றுமையுருபும் பயனுமுடன்தொக்க தொகை.
English Translation
This decad by Pattarbiran of Puduvai fame, where pure-tongued Vedic seers live, recalls the Talattu of Yasoda Sung for the dark-hued Lord who drank the deceitful ogress Putana’s breast. Those who recite it without a fault will have no sorrow.
