(54)

(54)

தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோய்

பொன்முகக் கிண்கிணி யார்ப்பப் புழுதி யளைகின்றான்

என்மகன் கோவிந்தன் கூத்தி னை இள மாமதீ

நின்முகம் கண்ணுள வாகில் நீஇங்கே நோக்கிப்போ.

பதவுரை

இள

இளமை தங்கிய
மா மதி

அழகிய சந்திரனே!
தன் முகத்து

தன்முகத்தில் (விளங்குகிற)
கட்டி

கட்டியானது
தூங்க தூங்க

பலகாலும் தாழ்ந்து அசையவும்
பொன்முகம்

அழகிய முகத்தையுடைய
கிண்கிணி

சதங்கைகளானவை
ஆர்ப்ப

கிண்கிண் என்றொலிக்கவும்
தவழ்ந்து போய்

(முற்றத்தில்) தவழ்ந்துபோய்
புழுதி

தெருப்புழுதிமண்ணை
அளைகின்றான்

அளையா நிற்பவனும்
என் மகன்

எனக்குப் பிள்ளையுமான
கோவிந்தன்

கண்ணபிரானுடைய
கூத்தினை

சேஷ்டைகளை
நின் முகம்

உன் முகத்தில்
கண் உள ஆகில்

கண் உண்டேயானால்
நீ இங்கே நோக்கி போ

நீ இங்கே பார்த்துப்போ.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – சந்திரா! எனது குழந்தையாகிய இக்கோபாலகிருஷ்ணன் தனது நெற்றியிலே சுட்டி அசையவும்  அரையிலே சதங்கை கிண்கிண் என்று சப்திக்கவும் தவழ்ந்துவந்து புழுதியளைகின்றான்; இந்த விளையாட்டைக் கண்டால் தான் நீ கண்பைடத்த பயன் பெறுவாய்; ஆகையாலே இவ்விளையாட்டைக் காண்கிற வியாஜமாக நீ இங்கே வந்து இக்குழந்தையின் கண்ணிலே தென்படுவாயாக என்று யசோதைப்பிராட்டி சந்திரனை யழைக்கிறாள்.

English Translation

O, Tender Moon! If you have eyes on your face, come and see my child Govinda’s pranks as he crawls, kicking up dust.  His forehead pendant sways, his golden anklet jingles.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top