(44)

(44)

மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி

ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்

பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்

மாணிக் குறளனே தாலேலோ! வைய மளந்தானே தாலேலோ!

பதவுரை

மாணிக்கம்

–

மாணிக்கத்தை
கட்டி

–

(இரண்டருகும்) கட்டியும்
இடை

–

நடுவில்
வயிரம்

–

வயிரத்தை
கட்டி

–

கட்டியும்
ஆணிப் பொன்னால்

–

மாற்றுயர்ந்த பொன்னால்
செய்த

–

செய்யப்பட்ட
வண்ணம்

–

அழகிய
சிறு தொட்டில்

–

சிறிய தொட்டிலை
பிரமன்

–

சதுர்முகனானவன்
பேணி

–

விரும்பி
உனக்கு

–

உனக்கு
விடுதந்தான்

–

அனுப்பினான்
மாணி குறளனே

–

ப்ரஹம்சாரிவாமநாவதாரம் பண்ணின கண்ணனே!

தாலேலோ!

வையம்

–

உலகங்களை
அளந்தானே

–

(த்ரிவிக்ரமனாய்) அளந்தவனே!

தாலேலோ!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** –  திவ்யமான தொட்டிலைப் பிரமன் கொணர்ந்து ஸமர்ப்பித்தானென்கிறாள்.

மாணிக்கம்     –  நவரத்நங்களுள் ஒன்று : இது செந்நிறம் உடையது; (நூல்களில் கருமாணிக்கமெனவருதல் இல்பொருளுவமையாம்).  ஆணிப்பொன் – மாற்றறிதற்குக் கொள்ளும் உயர்தரப்பொன்; இதுக்கு மேலே மாற்றில்லையென்னும்படியான சிறந்தபொன் என்றுரைப்பர்.  தால் ஏல் ஓ= தால் – ‘தாலு’ என்ற வட சொல் விகாரம், தாடையென்றுபொருள்; ஏலே ஓ=அசைச்சொற்கள்; குழந்தைகளைத் தொட்டிலிவிட்டுப் பெண்கள் ‘உளு உளு உளு ஆயீஇ! என்று உள்தாடையை நாவாலே ஒலித்துச் சீராட்டுதலைத் ‘தாலேலோ’ என்று வழங்குதல் மரபு.  மாணிக்கம், வயிரம், வண்ணம், பிரமன் – வட சொல் விகாரங்கள்.

English Translation

O, Naked manikin, Talelo,–Brahma has sent you this little golden cradle studded with rubles and diamonds, –You measured the Earth, Talelo.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top