(45)
உடையார் கனமணியோடு ஒண்மா துளம்பூ
இடைவிரவிக் கோத்த எழில்தெழ்கி னோடு
விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்;
உடையாய் அழேல்அழேல் தாலேலோ! உலக மளந்தானே தாலேலோ!
பதவுரை
| உடை ஆர் |
– |
திருவரைக்குச் சேரும்படியான |
| கனம் மணியோடு |
– |
பொன் மணியையும் |
| இடை |
– |
நடுநடுவே |
| விரவி |
– |
கலந்து |
| கோத்த |
– |
கோக்கப்பட்ட |
| எழில் |
– |
அழகிய |
| தெழ்கினோடும் |
– |
இடைச் சரிகையையும் |
| ஒன் மாதளம்பூ |
– |
அழகிய மாதளம்புக் கோவையான அரை வடத்தையும் |
| விடைஏறு |
– |
ரிஷபவாஹகனாய் |
| காபாலி |
– |
கபாலதாரியாய் |
| ஈசன் |
– |
ஸ்வவ்யூஹத்துக்கு நியாமகனான ருத்ரன் விடுதந்தான்-; |
| உடையாய் |
– |
ஸ்வாமியான கண்ணனே! |
| அழேல் அழேல் |
– |
அழாதேகொள், அழாதேகொள் |
|
தாலேலோ உலகம் அளந்தானே! தாலேலோ! |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – சிவபிரான் மாதளம்பூக் கோவையென்கிற அரைவடம் முதலியவற்றை அனுப்பியிருக்கிறான் (அவற்றைச் சாத்திக்கொள்) என்று சொல்லித் தாலாட்டுகிறான். உடை என்பது வஸ்திரத்துக்கு வாசகமாயினும் இங்குத் தானியாகு பெயராய் இடையைக்காட்டிற்று. தேழ்கு – அரையில் சொருகும் கத்தி. சிவன் ரிஷபவாஹனனாதாலால் விடையேறு என்றும், பிரமனுடைய ஐந்து தலைகளிலொன்றைப் பறித்துவிட்டதனால் அக்கபாலம் அப்படியே கையிலொட்டிக் கொண்டதுபற்றிக் கபாலி என்றும், அணிமா மஹிமா கரிமா லகிமா ப்ராப்தி ப்ராகாம்யம் ஈசத்வம் வசித்வம் என்று சொல்லப்படுகிற அஷ்டைச்வரியங்களையுடையனாகையாலே ஈசன் என்றும் சொல்லப்பட்டான். கனகம் என்ற வடசொல் கனம் எனக்குறைந்தது. உடையாய் – உடையான் என்பதன் ஈறுதிரிந்தவிளி.
English Translation
The buffalo-rider Siva has sent you this girdle of golden beads alternating with beautiful pear shaped drops, perfectly befitting your waist. O, My Master, don’t cry, Talelo. You measured the Earth, Talelo.
