(37)

(37)

நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்

நாக்கு வழித்துநீ ராட்டும்இந் நம்பிக்கு

வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்

மூக்கும் இருந்தவா காணீரே மொய்குழ லீர்வந்து காணீரே.

பதவுரை

அசோதை

–

யசோதைப்பிராட்டி
நோக்கி

–

(கண்ணபிரான்திருமேனியின் மென்மைக்குத் தக்கப்படி) பார்த்து ஆராய்ந்து
நுணுக்கிய

–

அரைத்த
மஞ்சளால்

–

மஞ்சட்காப்பாலே,

நாக்குவழித்து – ;

நீராட்டும்

–

ஸ்நாநம் செய்விக்கப் பெறுகின்ற
இ நம்பிக்கு

–

இக்கண்ணபிரானுடைய
வாக்கும்

–

திருவாக்கும்
நயனமும்

–

திருக்கண்களும்
வாயும்

–

அதரஸ்புரணமும்
முறுவலும்

–

புன்சிரிப்பும்
மூக்கும் இருந்த ஆ

–

மூக்குமிருந்தபடியை

காணீர்!

மொய்குழலீர்

–

–

செறிந்தகுழலையுடைய பெண்காள்! வந்து

காணீர்!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரானுடைய திருமேனியின் ஸௌகுமார்யத்தை யறியும் யசோதையானவன் தான் அத்திருமேனிக்குத் தகுதியாக அரைத்த மஞ்சட் காப்பாலே நாக்கை வழித்துத் திருமஞ்சனஞ் செய்யும்படி அடங்கியிருப்பன் கண்ணன்; அவனுடைய வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருக்கிறப்படியைப் பாருங்களென்கிறது.  வாக்கு என்றது –  தாய், தந்தை முதலானாருடைய நாமங்களைச் சொல்லுகிற வாகிந்திரியத்தைச் சொன்னபடி.  வாயும் என்றது அதரத்தைச் சொன்னபடி.  இனி, வாயும் என்பதை முறுவலுக்கு விசேஷணமாக்கி, வாய்த்திருக்கின்ற புன்சிரிப்பு என்று உரைக்கலாம் என்றான் ஒரு தமிழன்.

English Translation

O Ladies with dense coiffure, come here and see.  With freshly ground turmeric, Yasoda carefully bathes the child and cleans his tongue.  See his eyes, nose, mouth and smile.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top