(32)
பெருமா வுரலில் பிணிப்புண் டிருந்துஅங்கு
இருமா மருதம் இறுத்தஇப் பிள்ளை
குருமா மணிப்பூண் குலாவித் திகழும்
திருமார்பு இருந்தவா காணீரே சேயிழை யீர்வந்து காணீரே.
பதவுரை
| பெரு மா உரலில் |
– |
மிகப்பெரிய உரலோடு |
| பிணிப்புண்டு |
– |
கட்டுண்டிருந்து இருந்து |
| அங்கு |
– |
அந்த நிலைமையிலே |
| இரு மா மருதம் |
– |
இரண்டு பெரிய மருத மரங்களை |
| இறுத்த |
– |
முறித்தருளின |
| இ பிள்ளை |
– |
இக்கண்ணபிரானுடைய, |
| குரு மா |
– |
மிகவும் சிறந்த |
| மணி பூண் |
– |
கௌஸ்துபாபரணமானது |
| குலாவி திகழும் |
– |
அசைந்து விளங்கா நின்றுள்ள |
|
திருமார்வு இருந்த ஆ காணீர்! |
||
| சே இழையீர் |
– |
செவ்விய ஆபரணங்களையுடைய பெண்காள் |
|
வந்து காணீர்! |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – “குருமாமணிப்பூண்’’ என்று சிறந்த ரத்நாபரணமாகிய கௌஸ்துபமணியைச் சொல்லுகிறது. . . . . . . என்ற வட சொல் குரு என்றாயிற்று. ச்லாக்க்யமான என்றபடி. அப்படிப்பட்ட திவ்யாபரணம் விளங்கப்பெற்ற திருமார்வினழகைக் காணுங்களென்கிறாள்.
மருதமிறுத்தகதை:- கண்ணன் குழந்தையாய் இருக்குங்காலத்தில் துன்பப்படுத்துகின்ற பல விளையாடல்களைச் செய்யக்கண்டு கோபித்த யசோதை கண்ணனைத் திருவயிற்றிற் கயிற்றினாற் கட்டி ஒருரலிலே பிணித்துவிட, கண்ணன் அவ்வுரலையிழுத்துக்கொண்டு அங்கிருந்த இரட்டை மருதமர (யமளார்ஜுக)த்தின் நடுவே எழுந்தருள, அவ்வுரல் குறுக்காய் நின்று இழுக்கப்பட்ட படியினாலே அம்மரங்களிரண்டும் முறிந்து விழிந்தவளவில், நாரதர்சாபத்தாலே அம்மரங்களாய்க் கிடந்த நளகூபரன், மணிக்ரீவன் என்னும் குபேரபுத்திரரிருவரும் சாபந்தீர்ந்து சென்றனரென்பது.
English Translation
Bright-jeweled Ladies, come here and see the radiant chest of this child adorned with a dazzling pendant. Tethered to a huge mortar, he crawled between the twin Arjuna trees and broke them.
