(37)
நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்
நாக்கு வழித்துநீ ராட்டும்இந் நம்பிக்கு
வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்
மூக்கும் இருந்தவா காணீரே மொய்குழ லீர்வந்து காணீரே.
பதவுரை
| அசோதை |
– |
யசோதைப்பிராட்டி |
| நோக்கி |
– |
(கண்ணபிரான்திருமேனியின் மென்மைக்குத் தக்கப்படி) பார்த்து ஆராய்ந்து |
| நுணுக்கிய |
– |
அரைத்த |
| மஞ்சளால் |
– |
மஞ்சட்காப்பாலே, |
|
நாக்குவழித்து – ; |
||
| நீராட்டும் |
– |
ஸ்நாநம் செய்விக்கப் பெறுகின்ற |
| இ நம்பிக்கு |
– |
இக்கண்ணபிரானுடைய |
| வாக்கும் |
– |
திருவாக்கும் |
| நயனமும் |
– |
திருக்கண்களும் |
| வாயும் |
– |
அதரஸ்புரணமும் |
| முறுவலும் |
– |
புன்சிரிப்பும் |
| மூக்கும் இருந்த ஆ |
– |
மூக்குமிருந்தபடியை |
|
காணீர்! |
||
| மொய்குழலீர் |
– – |
செறிந்தகுழலையுடைய பெண்காள்! வந்து |
|
காணீர்! |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கண்ணபிரானுடைய திருமேனியின் ஸௌகுமார்யத்தை யறியும் யசோதையானவன் தான் அத்திருமேனிக்குத் தகுதியாக அரைத்த மஞ்சட் காப்பாலே நாக்கை வழித்துத் திருமஞ்சனஞ் செய்யும்படி அடங்கியிருப்பன் கண்ணன்; அவனுடைய வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருக்கிறப்படியைப் பாருங்களென்கிறது. வாக்கு என்றது – தாய், தந்தை முதலானாருடைய நாமங்களைச் சொல்லுகிற வாகிந்திரியத்தைச் சொன்னபடி. வாயும் என்றது அதரத்தைச் சொன்னபடி. இனி, வாயும் என்பதை முறுவலுக்கு விசேஷணமாக்கி, வாய்த்திருக்கின்ற புன்சிரிப்பு என்று உரைக்கலாம் என்றான் ஒரு தமிழன்.
English Translation
O Ladies with dense coiffure, come here and see. With freshly ground turmeric, Yasoda carefully bathes the child and cleans his tongue. See his eyes, nose, mouth and smile.
