(959)

(959)

கலங்கமாக்கடலரிகுலம்பணிசெய்ய அருவரையணைகட்டி,

இலங்கைமாநகர்ப்பொடிசெய்தவடிகள்தாம் இருந்தநல்லிமயத்து,

விலங்கல்போல்வனவிறலிருஞ்சினத்தன வேழங்கள்துயர்க்கூர,

பிலங்கொள்வாளெயிற்றரியவைதிரிதரு பிரிதிசென்றடைநெஞ்சே.


பதவுரை

நெஞ்சே

மனமே!,

மா கடல்

மஹா ஸமுத்தரமானது

கலக்க

கலங்கும்படி

அரி குலம் பணி செய்ய

வாநகர ஸமூஹம் கைங்கரியம் பண்ண

அரு வரை

அசைக்க முடியாத பெரிய மலைகளைக் கொண்டு

அணை கட்டி

ஸேதுகட்டி

மா இலங்கை நகர்

பெரிய லங்காபுரியை

பொடி செய்த

பொடிபடுத்திய

அடிகள் தாம்

ஸர்வஸ்வாமி

இருந்த

எழுந்தருளியிருக்கப்பெற்ற

நல் இமயத்து

நல்ல ஹிமவானில்,-

விலங்கல் போல்வனவிறல்

மலை போன்றவையாய் மிகக்கையுடையவையாய்

இரு சினத்தன

மிக்க கோபத்தை யுடையவையான

வேழங்கள்

யானைகள்

துயர்கூர

துன்பப்படும்படியாக

பிலம் கொள்

குறைகளை இருப்பிடமாகக் கொண்டிருக்கிற

வாள் எயிறு

வாள் போன்ற பற்களையுடைய

அரி அவை

சிங்கங்களானவை

திரிதரு

திரியுமிடமாகிய

பிரிதி

திருப்பிரிதியை

சென்று அடை

சென்று சேர்ந்திடு.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

கலங்க மாக்கடலரிகுலம் பணிசெய்ய அருவரை யணைகட்டி *

இலங்கை மாநகர் பொடி செய்த வடிகள் தாம் இருந்த நலிமயத்து *

விலங்கல் போல்வன விறலிருஞ் சினத்தன வேழங்கள் துயர்கூர * பிலங்கொள்

வாளெயிற்றரியவை திரிதரு பிரிதி சென்றடை நெஞ்சே! நெஞ்சே மனமே!


(கலங்கமாக்கடல்.] ஸுக்ரீவமஹாராஜருடைய துயரைத் தொலைத்த விருத்தாந்தத்தைக் கீழ்ப்பாட்டில் அநுஸந்தித்தார். அந்த ஸுக்ரீவனுடைய படைத்துணையால் இராமபிரான் தன் துயரைத் தொலைத்துக்கொண்ட விருத்தாந்தத்தை இப்பாட்டில் அநுஸந்திக்கிறார்.

விபீஷணாழ்வான் இராமபிரான் பக்கல் வந்து சேர்ந்து உய்ந்தபின் பெருமாளைப் பார்த்து ‘ஸ்வாமிந்! இந்த நம்முடைய ஸேனைகள் கடலைக்கடந்து அப்பாற் செல்லவேண்டுமாதலால் அதற்காகக் கடலரசனை நீர் சரணம் புகவேணும்’ என்ன; இராமபிரான் “கடலைக்கடக்க உபாயம் சொல்லவேண்டும்” என்று கடலாசனாகிய வருணனைப் பிரார்த்தித்துத் தர்ப்பசயனத்திலே படுத்து மூன்று  நாளளவும்  ப்ராயோபவேசமாகக்கிடக்க, ஸமுத்ரராஜன் அப்பெருமானது மஹிமையைக் கருதாமல் உபேக்ஷையாயிருந்துவிடவே ஸ்ரீராமன் அதுகண்டு கோபங்கொண்டு (அனைவரும் நடந்தே செல்லும்படி கடலை வற்றச்செய்வேன்’ என்று ஆக்நேயாஸ்த்ரத்தைத் தொடுக்கத் தொடங்கியவளவிலே – வருணன் அஞ்சி நடுங்கி ஓடிவந்து இராமபிரானைச் சரணமடைந்து கடல் வடிவமான தன்மேல் அணைகட்டுதற்கு உடன்பட்டு, நளன்கையினால் நீரில் போகட்ட கற்களும் மிதக்குமென்று அவனுக்கு அவன் தகப்பனார் வரமளித்திருக்கிறாராகையால் அவனைக்கொண்டு ஸேது கட்டவேணுமென்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டான். இராகவனும் அப்படியே மற்ற வானரங்கள் சுற்றுமுள்ள மலைகளைப் பிடுங்கிக்கொண்டுவந்து நளன்கையில் கொடுக்கச்செய்து நளன் கையினால் அம்மலைகளை நீரில் போகடுவித்து ஸேது கட்டுவித்தான். அவ்வழியாய் வானரப்படைகளோடு இராமபிரான் இலங்கை சேர்ந்து அந்நகரையும் இராவணனுள்ளிட்ட அரக்கர் குலத்தையும் நீறுபடுத்தின வரலாறு ப்ரஸித்தம்.

ஒன்றுக்குங் கலங்கமாட்டாத மாகடல் கலங்கும்படியாகவும், ஸம்ஸார நாற்றமே அறியாத திருவனந்தாழ்வான் ஸேனைமுதலியார் முதலிய நித்ய ஸூரிகள் செய்யத் தக்க கைங்கரியத்தை இடக்கை வலக்கை வாசியறியாத வாநர ஜாதி செய்யும்படியாகவும், நீரில் ஆழ்ந்து போகக்கூடிய மலைகள் மிதந்து அணையாய் நிற்கும்படியாகவும் செய்தருளிய விசித்திரசக்தி இவ்வரலாற்றால் விசதமாகும்.

இப்படிப்பட்ட மஹாவீரன் எழுந்தருளியிருக்கப்பெற்ற இமயமலையின் கண்.

கீழ்ப்பாட்டில் இமயத்துள் என்று வந்தது; இப்பாட்டில் இமயத்து என்று வந்தது ; மேற்பாசுரங்களிலும் இப்படி மாறி மாறி வருகின்றன ; இதற்கு நிதானமேதென்னில் ; மூன்றாமடியின் முதலெழுத்து உயிரெழுத்தாக அமையும் பாசுரங்களில் இமயத்துள் என்றும், அது மெய்யெழுத்தாக அமையும் பாசுரங்களில் இமயத்து என்றும் வருமெனக் கண்டுகொள்க.

மலைபோலப் பருத்த வடிவையுடையனவாய், வடிவுக்கேற்ற மிடுக்கையு முடையனவாய், மிடுக்குக்கு உரிய கோபத்தையுமுடையனவான மத்தகஜங்கள் அஞ்சும்படியாக வாள் போன்ற பற்களையுடைய சிங்கங்கள் திரியுமிடமான பிரிதியென்று அத்தலத்தின் நிலைமை கூறப்பட்டது பின்னடிகளில். బలమ్ (பலம் ) என்ற வடசொல் பிலமெனத் திரிந்தது ; குஹை. ….. ….. …. (உ)


English Translation

Monkeys came to help throwing rocks and rubble over Ocean to build the bridge, O! Burning down the City Lanka in the golden past, –he’s Resident of Himavan peaks. Mountain-like and strong elephants do call in rut and gather in the forest above, Where the roaring lions majestically do stalk in Piriti, –O, Go to, my heart!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top