(933)

(933)

கையினார் சுரிசங்கன லாழியர் நீள்வரைபோல்

மெய்யனார் துளப விரையார் கமழ்நீள் முடியெம்

ஐயனார் அணியரங்கனா ரரவின ணைமிசை மேயமாயனார்

செய்யவா யையோ. என்னைச் சிந்தை கவர்ந்ததுவே.

பதவுரை

கையின்

திருக்கைகளில்
ஆர்

பொருந்தியிருக்கிற
சுரி சங்கு

சுரியையுடைய திருச்சங்கையும்
அனல் ஆழியர்

தீ வீசுகின்ற திருவாழியையும் உடையராய்,
நீள் வரை போல்

பெரியதொரு மலைபோன்ற
மெய்யனார்

திருமேனியையுடையராய்
துளபம் விரை ஆர்

திருத்துழாயின் பரிமளம் மிகப்பெற்று (அதனால்)
கமழ்

பரிமளியாநின்றுள்ள
நீள்முடி

உயர்ந்த திருவபிஷேகத்தை யுடையராய்
எம் ஐயனார்

எமக்கு ஸ்வாமியாய்
அணி அரங்கனார்

அழகு பொருந்திய திருவரங்கத்திற் கண்வளர்ந்தருள்பவராய்
அரவு இன் அணை மிசை மேய

திருவனந்தாழ்வானாகிற இனிய திருப்பள்ளியின் மீது பொருந்திய
மாயனார்

ஆச்சரியச் செய்கைகளையுடையரான ஸ்ரீ ரங்கநாதருடைய
செய்ய வாய்

சிவந்த திருப்பவளமானது
என்னை

என்னுடைய
சிந்தை

நெஞ்சை
கவர்ந்தது

கொள்ளைகொண்டது;
ஐயோ

(ஆநந்தாதிசயக் குறிப்பு.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருக்கைக்கு ஆயுதமாகவும் ஆபரணமாகவும் விளங்குகின்ற திருவாழி திருச்சங்குகளையுடையனாய், மாம்ஸசக்ஷூஸ்ஸூக்களான நம் போன்றவர்களும் கண்ணாரக் காணும்படியாகப் பெரிய பச்சைமாமலை போன்ற மேனியையுடையனாய், அனைவரையும் ரக்ஷிக்க ஸித்தனாயிருக்கும்படியை விளங்குகின்றனாய், திருவரங்கத்தில் திருவனந்தாழ்வான்மீது பள்ளிகொள்பவனான அழகிய மணவாளனுடைய கொவ்வைக்கனி போற் சிவந்த திருவதரமானது என் நெஞ்சைக் கவர்கின்றதே! இதற்கு என் செய்வேன்! என்கிறார்.

எம்பெருமானை முழுக்க அநுபவிக்கப் பார்த்திருக்கையில் இடையிலே நெஞ்சைக்  கொள்ளை கொண்டுவிட்டதே அதரம்!  இதற்கென் செய்வேன் என்பார்  ஐயோ! என்கிறார்.  “பண்டே நெஞ்சுபறிகொடுத்தவென்னை அநியாயம் செய்வதே! என்று கூப்பிடுகிறார்” என்பர் பெரியவாச்சான்பிள்ளை. “ஐயோ வென்றது-ஆச்சர்யத்தையாதல், அநுபவிக்க அரிதானபடியையாதல், அநுபவரஸத்தையாதல் காட்டுகிறது” என்பர் தூப்புற்பிள்ளை.

சுரி-சங்குக்கு  உள்ளதொரு லக்ஷணம்.

English Translation

He wields the discus and conch in his hands. His body is like a dark mountain. He is my master with a tall crown wafting the fragrance of Tulasi. He is the wonder-Lord of Arangam reclining on a serpent bed. Aho, his red lips have won my heart over!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top