(928)
உவந்த வுள்ளத்தனா யுலகமளந் தண்டமுற
நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை
கவர்ந்த வெங்கணைக்காகுத்தன் கடியார்பொழில் அரங்கத்தம்மான்அரைச்
சிவந்த ஆடையின் மேல்சென்ற தாமென் சிந்தனையே,
பதவுரை
உவந்த உள்ளத்தன் ஆய் |
– |
மகிழ்ச்சியோடு கூடிய மனத்தையுடையவனாய்க் கொண்டு |
உலகம் அளந்து |
– |
மூவுலகங்களையும் அளந்து |
அண்டம் உற |
– |
அண்டகடாஹத்தளவுஞ் சென்று முட்டும்படி |
நிவந்த |
– |
உயர்த்தியை அடைந்த |
நீள் முடியன் |
– |
பெரிய திருமுடியையுடையவனாய் |
அன்று |
– |
முற்காலத்தில் |
நேர்ந்த |
– |
எதிர்த்துவந்த |
நிசரசரரை |
– |
ராக்ஷஸர்களை |
கவர்ந்த |
– |
உயிர்வாங்கின |
வெம் கணை |
– |
கொடிய அம்புகளையுடைய |
காகுத்தன் |
– |
இராமபிரானாய், |
கடி ஆர் |
– |
மணம் மிக்க |
பொழில் |
– |
சோலைகளையுடைய |
அரங்கத்து |
– |
ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனான |
அம்மான் |
– |
எம்பிரானுடைய |
அரை |
– |
திருவரையில் (சாத்திய) |
சிவந்த ஆடையின் மேல் |
– |
பீதாம்பரத்தின் மேல் |
என சிந்தனை |
– |
என்னுடைய நினைவானது |
சென்றது ஆம் பதிந்ததாம் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கருத்து:- கீழ்ப்பாட்டில், “திருக்கமலபாதம் வந்து” என்றதும், இப்பாட்டில் “ஆடையின்மேற் சென்ற தாமென சிந்தனை” என்றதும் உற்றுநோக்கத்தக்கவை. முதலில் எம்பெருமான் தானாக ஆழ்வாரை அடிமைகொள்ள மேல் விழுந்தபடியும், பிறகு ஆழ்வார் ருசிகண்டு தாம் மேல் விழுகிறபடியும் இவற்றால் தோற்றும். ஈன்ற நாகானது தன்கன்றுக்கு முதலில் முலைச்சுவை தெரியாமையாலே தானே தன்முலையை அதன் வாயிலே கொடுக்கும்; பின்பு சுவடறிந்தால் நாகு காற்கடைக்கொண்டாலும் கன்று தானே மேல்விழும்; அப்படியே, திருவடிகள் தானேவந்து போக்யமானவாறு கூறினர் முதற்பாட்டில்; இதில், தம்முடைய நெஞ்சு சுவடறிந்து மேல்விழுமாறு கூறுகின்றனரென்க.
உலகமளந்த வரலாறு:-மஹாபலியென்னும் அஸூரராஜன் தன் வல்லமையால் இந்திரன் முதலிய யாவரையும் வென்று மூன்று உலகங்களையும் தன் வசப்படுத்தி அரசாட்சி செய்துகொண்டு செருக்குற்றிருந்தபொழுது, அரசிழந்த தேவர்கள் திருமாலைச் சரணமடைந்துவேண்ட, அப்பெருமான் குள்ள வடிவமான வாமநாவதாரங்கொண்டு காச்யபமாமுனிவனுக்கு அதிதி தேவியினிடந் தோன்றிய பிராமண ப்ரஹ்மசாரியாகி, வேள்வியியற்றி யாவர்க்கும் வேண்டிய அனைத்தையுங் கொடுத்துவந்த அந்த மாவலியிடஞ்சென்று, தவஞ்செய்ததற்குத் தன் காலடியால் மூவடி மண்வேண்டி, அது கொடுத்தற்கு இசைந்து அவன் தாரைவார்த்துக் தத்தஞ்செய்தநீரைக் கையிலேற்று உடனே திரிவிக்கிரமனாக ஆகாயத்தை அளாவிவளர்ந்து ஓரடியால் பூலோகத்தையும் மற்றோரடியால் மேலுலகத்தையுமளந்து, தாநமாகப் பெற்ற மற்றோரடிநிலத்திற்கு இடமில்லாதொழியவே அதற்காக் அவன் வேண்டுகோளின்படி அவனது முடியில் அடியை வைத்து அவனைப் பாதாளத்தில் அழுத்தி அடக்கினன் என்பதாம். பூலோகத்தை அளந்ததில் அதன்கீழுள்ள பாதாளலோகமும் அடங்கிற்று; எனவே எல்லா வுலகங்களையுமளந்ததாம். இச்சரித்திரத்தினால், கொடியவரை அடக்குவதற்கும், இயல்பில் அடிமையாகின்ற அனைத்துயிரையும் அடிமைகொள்வதற்கும் வேண்டிய தந்த்ரம் வல்லவன் என்பது போதரும்.
உலகளக்கும்போது அடியாரோடு அஹங்காரிகளோடு வாசியற எல்லார் தலையிலும் திருவடியைவைத்து அவர்களை தந்யராக்கப்போகிறோமென்று எம்பெருமான திருவுள்ளத்திற்கொண்ட உகப்பை வெளியிடுகிறார். உவந்த உள்ளத்தனாய் என்று.
நிசாசரர், காகுத்தன், சிந்தனை – வடசொற்கள். நிசாசரர்-இரவில் திரி
யுமர்களிறே ராக்ஷஸர்கள். காகுத்தன்-ககுத்ஸ்னென்று ப்ரஸித்தி பெற்ற அரசனது குலத்திற் பிறந்தவன்; (ஸ்ரீராமன்;) எருதுவடிவங்கொண்ட இந்திரனது முசுப்பின் மேலேறி யுத்தஞ்செய்யச் சென்றதனால் இவ்வரசனுக்குக் ககுத்ஸ்தனென்று பெயராயிற்று. (ககுத்-முசுப்பு; ஸ்தன்-இருப்பவன்.)
“நிமிர்ந்த நீண்முடியன்” என்பதும் பாடம்.
English Translation
With glee in his heart, he measured the Earth; his crown touched the roof of the Universe. He is the Kakuthstha Lord Rama, who rained arrows and killed the Rakshasas clan: He is the Lord of Arangam surrounded by fragrant groves. My mind hovers over the red vestures on his dark frame!