(925)

(925)

ஏதமில் தண்ணுமை யெக்கம்மத் தளியே யாழ்குழல் முழவமோ டிசைதிசை கெழுமி

கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் கந்தரு வரவர் கங்குலு ளெல்லாம்

மாதவர் வானவர் சாரண ரியக்கர் சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்

ஆதலி லவர்க்குநா ளோலக்க மருள அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே.

பதவுரை

ஏதம் இல்

குற்றமற்ற
தண்ணுமை

சிறுபறையும்
எக்கம்

ஒற்றைத்தந்தியையுடைய வாத்யமும்
மத்தளி

மத்தளமும்
யாழ்

வீணையும்
குழல்

புல்லாங்குழல்களுமாய்
திசை

திக்குக்களெங்கும்
முழவமோடு

இவற்றின் முழக்கத்தோடு
இசை கெழுமி கீதங்கள் பாடினர்

இசை மாட்டியப் பாட்டு பாடக்கடவரான
கின்னார்

கின்னார்களும்
கருடர்

கருடர்களும்
கெந்தருவரும்

கந்தர்வர்களும்
இவர்

இதோ மற்றுள்ளவர்களும்
மா தவர்

மஹர்ஷிகளும்
வானவர்

தேவர்களும்
சாரணர்

சாரணர்களும்
இயக்கர்

யக்ஷர்களும்
சித்தரும்

ஸித்தர்களும்
திருவடி தொழுவான்

(தேவரீடைய) திருவடிகளில் வணங்குகைக்காக
கங்குலும் எல்லாம்

இரவெல்லாம்
மயங்கினர்

(நெருக்கத்தில் வருந்தி) மோஹமுற்றனர்;
ஆதலில்

ஆகையாலே
அவர்க்கு

அவர்களுக்கு
நாள் ஒலக்கம் அருள

பகலோலக்க மருளுகைக்காக

அரங்கத்தம்மா!  பள்ளியெழுந்தருளாய்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வாத்தியங்களுக்குக் குற்றமில்லாமையாவது-நாதம் நன்கு உண்டாகும்படி அமைதியாயிருக்கை. எக்கம்-தாள மென்றுங்கூறுவர். முழவம்- ‘பெருவாயன்’ என்றொரு வாத்யவிசேஷமுண்டு; அதனைச் சொல்லிற்றாகவுமாம்; அப்போது- யாழ்குழல் முழவங்களிலுண்டான நாதமானது திசைகள்தோறும் வியாபிக்கும் படி கிந்நராதிகள் கீதங்களைப் பாடாநின்றனர்; கெந்தரும் இவர்-கெந்தர்வர்களும் இதோ அருகே வந்திராநின்றார்கள் எனப்பொருள் கொள்க. சாரணர்-தேவஜாதியிலே உலாவித்திரியுவர்கள்.

விமாநஸஞ்சாரிகளான தேவர்களோடு மஹர்ஷிகளோடு யக்ஷஸித்தசாரண ரென்கிற தேவர்களோடு கிந்நரர் கருடர்கள் என்கிற மங்களாசாஸநம் பண்ணுவாரோடு இவர்களில் தலைவரான கந்தர்வர்களோடு வாசியற, சிறியார் பெரியார் என்னாதே படுகாடுகிடக்கின்றனர். திருப்பள்ளியுணர்ந்தருளி எல்லாரும் வாழும்படி கடாக்ஷித்தருள வேணுமென்கிறது.

கீதம் –ஹீதம் ‘கந்தருவர்’ என்பது மோனையின்பம் நோக்கிக் “கெந்தருவர்” என்றாயிற்று. நாளோலக்கம் – பிராத: காலத்திலே சீரிய சிங்காசனத்திலே பெரிய கோஷ்ட்டியாக எழுந்தருளியிருந்து எல்லாரையும் குளிரக் கடாக்ஷிக்கும் ஸதஸ்ஸு.

English Translation

The air is rent with the music of beautiful one- stringed instruments, drums, lyres, flutes and cymbals. All night long the Kinnaras, the Garudas and the Gandharvas have been singing songs. The great sages and celestials, the Yakshas, the Charanas and the Siddhas have been yearning to worship your feet. Now to grant them audience, O Lord of Arangam, pray wake up.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top