(923)

(923)

அந்தரத் தமரர்கள் கூட்டங்க ளிவையோ அருந்தவ முனிவரும் மருதரு மிவரோ

இந்திர னானையும் தானும்வந் திவனோ எம்பெரு மானுன் கோயிலின் வாசல்

சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்

அந்தரம் பாரிட மில்லைமற் றிதுவோ அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே.

பதவுரை

எம்பெருமான்

எமக்கு ஸ்வாமியான
உன் கோயிலின் வாசல்

தேவரீருடைய திருக்கோயிலின் வாசலிலே
இந்திரன் தானும்

தேவேந்திரனும்
ஆனையும்

(அவனது வாஹனமான) ஐராவத யானையும்
வந்து

வந்திருப்பது மன்றி,
அந்தரத்து அமரர்கள்

அண்டத்துக்குள் இராநின்ற தேவர்களும்
கூட்டங்கள்

இவர்களுடைய பரிவாரங்களும்
அரு தவம் முனிவரும்

மஹாதபஸ்விகளான ஸநகாதி மஹர்ஷிகளும்
மருதரும்

மருத்கணங்களும்,
இயக்கரும்

யக்ஷர்களும்,
சுந்தரர் நெருக்க

கந்தர்வர் நெருக்கவும்
விச்சாதார் நூக்க

வித்யாதரர்கள் தள்ளவும்
திருவடி தொழுவான் மயங்கினர்

(தேவரீருடைய) திருவடிகளைத் தொழுவதற்காக வந்து மயங்கி நின்றனர்
அந்தரம்

ஆகாசமும்
பார்

பூமியும்
இடம் இல்லை

அவகாசமற்றிரா நின்றது;

அரங்கத்தமா! பள்ளியெழுந்தருளாய்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அந்தரம் என்றும், அண்டம் என்றும், ஆகாசம் என்றும், தேவலோகத்துக்குப் பேர். முனிவரும் மருதரும் இயக்கரும் திருவடி தொழுவான் மயங்கினர் என்று அந்வயம். சுந்தரர்- அழகுபொருந்தியவர் என்றபடி. விச்சாதரர்- விஸயாயா என்ற வடசொல் திரிபு. நூக்குதல்- தள்ளுதல். இயக்கர்-யக்ஷ என்ற வடசொல் திரிபு. முனிவரும் மருதரும் யக்ஷர்களும் வந்து புகுகையில் கந்தர்வர்களும் வித்யாதரர்களும் அவர்களிடையே புகுந்து நெருக்கிப் தள்ளுகின்றனரென்க.

English Translation

This here is the throng of celestials. These here are the great Munis and Maruts. This here is Indra come riding on his elephant in front of your temple. With Sundaras crowding and Vidyadharas cramping, the Yakshas are lost in contemplation of your feet. There is no place to stand. O Lord of Arangam, pray wake up.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top