(795)

(795)

பாலினீர்மை செம்பொனீர்மை பாசியின்ப சும்புறம்

போலுநீர்மை பொற்புடைத்த டத்துவண்டு விண்டுலாம்

நீலநீர்மை யென்றிவைநி றைந்தகாலம் நான்குமாய்

மாலினீர்மை வையகம்ம றைத்ததென்ன நீர்மையே.

பதவுரை

பாலின் நீர்மை

பாலின் நிறம்போன்ற வெண்மையென்ன
செம்பொன் நீர்மை

சிவந்த பொன்னின் நிறம் போன்ற செம்மையென்ன
பாசியின் பசும்புறம் போலும் நீர்மை

பாசியினுடைய பசும்புறம் போன்ற பசுமை நிறமென்ன
பொற்பு உடை தடத்து வண்டு விண்டு உலாம் நீலம் நீர்மை

அழகையுடைய தடாகத்திலேயுள்ள வண்டுகள் சிறகு விரித்து பரவாநிற்கும் கருநெய்தல் பூவின் நிறம்போன்ற கருநிறமென்ன.
என்று இவை நிறைந்த

என்கிற இந்த நான்கு நிறங்களும் நிறையப்பெற்ற
காலம் நான்கும் ஆம் மாவின் நீர்மை

நான்கு யுகங்களுக்கும் நிர்வாஹகனான எம்பெருமானுடைய ஸௌலப்யகுணத்தை
வையகம்

இவ்வுலகத்திலுள்ளவர்கள்
மறைத்தது

திரஸ்கரித்தது
என்ன நீர்மை

என்ன ஸ்வபாவம்!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டின் “அஞ்சனத்தவண்ணனாய்” என்று திருமேனி நிறம் ப்ரஸ்துதமாகவே, க்ருதம் முதலிய யுகங்களில் சேதநர் தமது ஸத்வம் முதலிய குணங்கட்குத் தகுதியாக ச்வேதம் முதலிய வர்ணங்களை விரும்புகையாலே அவ்வக் காலங்களிலே அந்தந்த நிறங்களைப் பரிக்ரஹித்து முகங்காட்டினபடியை அநுஸந்தித்து, இப்படி முகங்காட்டச் செய்தேயும் ஸம்ஸாரிகள் காற்கடைக் கொள்ளுகிறார்களே! இதென்ன துர்வாஸநாபலம்!! என்று வருந்துகிறார்.

“பாசிபோலும் நீர்மை” என்னாதே “பாசியின் பசும்புறம்போலு நீர்மை” என்றது- பசுமை நிறத்தின் சிறப்புத்தோற்றலாம்; பாசியின் பசுமை குறைந்த புறமும் உண்டிறே. “நீலநீர்மை” என்னுமளவே போதுமாயிருக்க “பொற்புடைத்தடத்து வண்டுவிண்டுலல்” என்று நீலத்திற்கு அடைமொழி கொடுத்தது- உபமேயத்தில் போக்யதையைத் தோற்றுவிக்கைகாக வென்க. மூன்றாமடியின் முடிவில் “நான்குமாய்” என்று பெரும்பாலும் பாடமோதுவார்களேனும் அது உபேக்ஷிக்கத்தக்கதாம். “நான்குமாம் மாலின்” என்க. (சச)

English Translation

The white colour of milk at first, the red colour of glowing gold, the yellow hue of glossy moss, the dark colour of Kaya hue, the four Yugas are filled with all the four colours aforesaid, Lord! Your form and features lie hidden in all the lasting world you made.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top