(794)

(794)

வெஞ்சினத்த வேழவெண்ம ருப்பொசித்து உருத்தமா

கஞ்சனைக்க டிந்துமண்ண ளந்துகொண்ட காலனே

வஞ்சனத்து வந்தபேய்ச்சி யாவிபாலுள் வாங்கினாய்

அஞ்சனத்த வண்ணனாய ஆதிதேவ னல்லையே.

பதவுரை

வெம்சினந்த

–

உக்ரமான கோபத்தையுடைய
வேழம்

–

குவலயாபீட மென்னும் யானை யினுடைய
வெண் மருப்பு

–

வெண்ணிறமான தந்தத்தை
ஒசித்து

–

ஒடித்து (அந்த யானையை முடித்து)
உருத்த

–

கோபிஷ்டனாயும்
மா

–

பல்ஷ்டனாயுமிருந்த
கஞ்சனை

–

கம்ஸனை
கடிந்து

–

வதைசெய்து
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி

–

வஞ்சனையால் வந்த பூதனையின் உயிரை
பாலுன் வாங்கினாய்

–

முலைப்பாலுண்கிற பாவனையினால் ஆகர்ஜித்தவனே!
மண் அளந்து கொண்ட காலனே!

–

(த்ரிவிக்ரமனாய்) பூமியெல்லாமளந்துகொண்ட திருவடியையுடையவனே! நீ.
அஞ்சனந்த வண்ணன் ஆய

–

மைபோன்ற காந்தியையுடையனான
ஆதிதேவன் அல்லையே

–

ஆதிபுருஷனன்றோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ருத்ரனுடைய பாதகத்தைப் போக்கினவளவேயன்றிக்கே க்ருஷ்ணனாய் வந்தவதரித்த மண்ணின் பாரமான கம்ஸனைக் கூண்டோடு களைத்தருளுகையாலும், அந்த ருத்ராதிகளோடு க்ரிமிகீடோதிகளோடு வாசியின்றி எல்லார் தலைகளிலும் த்ரிவிக்ரமனாய்த் திருவடிகளை வைத்து ஸர்வேஷித்வத்தை விளக்கிக்கொண்டபடியாலும் ஜதத்காரணபூதன் நீயேயென்கிறார்.

English Translation

O Lord with feet that took the Earth, O Lord who broke the tusker tooth! O Lord who killed the anger king, — the Kamsa-Lord who meant you harm! O  Lord who sucked the poison breast of Putana and took her life! O lord who came as cowherd lad, o Lord of gods of darkest hue!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top