(793)

(793)

வேறிசைந்த செக்கர்மேனி நீரணிந்த புஞ்சடை

கீறுதிங்கள் வைத்தவன்கை வைத்தவன்க பால்மிசை

ஊறுசெங்கு ருதியால்நி றைத்தகார ணந்தனை

ஏறுசென்ற டர்த்தவீச பேசுகூச மின்றியே.

பதவுரை

கூசம் இன்றியே சென்று ஏறு அடர்ந்த ஈச

–

கூசாமல் சென்று (நப்பின்னைப் பிராட்டிக்காக) எருதுகளை வலியடக்கின பெருமானை!
வேறு

–

வேறாக
இசைக்க

–

ஸம்ஹாரத்தொழிலுக்குத் தகுதியான
செக்கர் மேனி

–

சிவந்த உடலையுடையனாய்
நீறு அணிந்த

–

பஸ்தாரியாய்
புண் சடை கீறு திங்கள் வைத்தவன் கை வைத்த

–

ஹேயாமன ஜடையிலே சந்திரகலையை வைத்துக் கொண்டிருப்பவனான ருத்திரன்
கை வைத்த

–

தன்கையில் வைத்துக் கொண்டிருந்த
வல் கபால் மிசை

–

வலிதான கபாலத்தை
ஊறுசெம் குருதியால்

–

உள் திருமேனியிலே ஊறா நின்றுள்ள சிவந்த ரத்தத்தாலே
நிறைந்த காரணம்தனை

–

நிறைந்த காரணத்தை
பேசு

–

அருளிச் செய்யவேணும்.
பாட்டு

பாலினீர்மை

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  “அரசுடைய கபாலத்தை நிறைந்தது எதற்காக? சொல்” என்று கேட்பதற்குக் கருத்து- நீ ஸர்வஸ்மாத்பரனாய் அவன் உன் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டவனாயிருக்கையாலே அவன் யாசிக்கவும் நீ அவனை அநுக்ரஹிக்கவும்  நேர்ந்ததென்று நாங்களெல்லாரும் நினைத்திருக்கிறாய்; இப்படி உனது பரத்வத்தை வெளியிடுதல் தவிர வேறு காரணமுண்டாகில் அருளிச்செய்யவேறும் என்கை.

“கூசமின்றியே பேசு” என்றாவது, “கூசமின்றியே ஏறு சென்றடர்த்தவீச!” என்றாவது அந்வயிக்கலாம். “ஏறு சென்றடர்த்தவீச! பேசு” என்ற ஸம்போதந் ஸ்வாரஸ்யத்தால்- நீ சாஸ்த்ரத்துக்கு வசப்படாத ஜந்மத்திலே பிறந்து ஏழு கோ (ஹோ) ஹத்யை பண்ணச் செய்தேயும் ஈச்வரத்யம் நிறம் பெறநின்றாய்; ருத்ரன் தன் ஈச்வரத்வத்தால் வந்த மேன்மை குலையாமல் நிற்க செய்தேயும் பாதகியானான்; அந்தப் பாதகத்தை உனது திருவருளால் போக்கிக் கொண்டான்; இந்த நெடுவாசியை அறியவல்லாரார்; என்பதாக உட்கருத்துத் தோனறும்.

வேறு இசைந்த செக்கர் மேனி = எம்பெருமான் ஸர்வரக்ஷகனாயிருக்குந் தன்மைக்கு ஏற்ப அவனுக்குக் கடல்போன்ற அழகிய வடிவம் அமைந்தால், சிவன் ஸர்வஸம்ஹாரகனாயிருக்குந்தன்மைக்கு ஏற்ப அவனுக்குக் கோபாவேச ஸூசகமாய்ச் செந்நிறமான உடல் அமைந்ததாம். கபால்- ‘கபாலம்’ என்ற வடசொல்லின்குறை. எவ்வளவு ப்ரயாஸப்படும் அக்கபாலம் கையைவிட்டு நீங்காதிருந்ததனால் வன் கபால் எனப்பட்து.

English Translation

The Lord Siva has countenance of red hue, ashes and the mat; He wears a crescent-moon and bears a skull for begging bowl in hand. You filled the skull with lotus blood and rid him of his long despair. O Lord who battled seven bulls, pray tell me why you did this act?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top