(792)
ஆயனாகி யாயர்மங்கை வேயதோள்வி ரும்பினாய்
ஆயநின்னை யாவர்வல்ல ரம்பரத்தொ டிம்பராய்
மாய! மாய மாயைகொல்அ தன்றிநீவ குத்தலும்
மாயமாய மாக்கினாயுன் மாயமுற்று மாயமே.
பதவுரை
| மாய ! |
– |
ஆச்சரியபூதனே. (நீ) |
| அயன் ஆகி |
– |
இடப்பிள்ளையாய்ப் பிறந்து |
| ஆயர் மங்கை |
– |
இடைப்பெண்ணான நப்பின்னைப்பிராட்டியினுடைய |
| வேய தோள் |
– |
வேய்போன்ற தோள்களை |
|
விரும்பினாய் விரும்பிப் புணர்ந்தாய்; |
||
| அம்பரத்தோடு இம்பராய் |
– |
மேலுலகத்தவர்களும் இவ்வுலகத்தவர்களுமா யுள்ளவர்களில் |
| யாவர் |
– |
யார்தான் |
| நின்னை ஆயவல்லர் |
– |
உன் ஸ்வரூபத்தை ஆராய்ந்து அறியவல்லர்? (யாரும் அறிய கில்லார்.) |
| மாயம் மாயை கொல்! |
– |
(இப்படி அறியமாட்டாதது) பிரகிருதியைப் பற்றின அஜ்ஞாகத்தலல்ல. (ஸர்வஜ்ஞராயிருந்தாலும் உன் ஸ்வரூபம் அறியமுடியாததே.) |
| அது அன்றி |
– |
அது அப்படியிருக்கட்டும்; |
| நீ |
– |
ஸர்வசக்தனான நீ |
| வகுத்தலும் |
– |
(உன்னை வணங்கி வழிபடுவதற்கு உறுப்பாகக் கரணகளே பராதிகளை) உபகரித்திருக்கச் செய்தேயும். |
| மாய |
– |
(சேதகர்கள் அவற்றைக்கொண்டு நல்வழியில் புகாமல்) மாய்ந்துபோக |
|
(அந்த விநாசத்தை நீ ஸஹிக்கமாட்டாமல்) |
||
| மாயம் ஆக்கினாய் |
– |
(இவரக்ளை ஸம்ஹரிப்பதே க்ஷேமமென்று) ப்ரக்ருத்யவஸ்தையிலே கொண்டு நிறுத்தினாய்; |
| உன் மாயம் முற்றும் |
– |
உன்னுடைய ஸங்கல்பமெல்லாம் |
| மாயமே |
– |
ஆச்சரியமாயிருக்கின்றன. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானே! நீ உகந்தாரைத் தத்ஸஜாதீயவான்ய வந்தவதரித்து ஸ்வரூபாநுரூபமாக ரக்ஷித்தருளும்படியையும்,விமுகரான ஸம்ஸாரிகளை ஸங்கல்பத்தாலே கர்மாநுகூலமாக ரக்ஷித்தருளும்படியையும் அநுஸந்திக்கப்புகுந்தால் பரிச்சோதிக்க முடியாத ஆச்சர்மாயிருக்கிறதே! என்கிறார்.
(நீ வகுத்தலும் இத்யாதி.) ஸம்ஸாரிகளுடைய இழவைக்கண்டு இரங்குமவனான நீ அவர்கள் உன்னையடைந்து உய்வதற்காக அவர்கட்கு நீ கரணகளேபரங்களைக் கொடுத்திருக்கச் செய்தேயும் அவர்கள் அவற்றைக்கொண்டு நன்மை தேடிக்கொள்ளாமல் விஷயாந்தரப்வணராய் அழிந்துபோக, ‘இவர்கட்கு இனி ஸம்ஹாரமே நல்லது’ என்று திருவுள்ளம்பற்றி அவர்களை ப்ரக்ருத்யவஸ்தையிலே கொண்டு நிறுத்தினாய்; உன்னுடைய மாநஸவயாபாரரூபமான ஸங்கல்பஜ்ஞாநமடங்கலும் ஆச்சர்யகரமாயிருக்கினற்து காணென்கிறார். நல்வழி தவிர்ந்து தீயவழியிற்சென்ற ஸம்ஸாரிகளை ஸம்ஹரிப்பதும் கர்மாநுகுணமான ரக்ஷணமென்று திருவுள்ளம். (சக)
English Translation
You came as cowherd-lad and sought bamboo-shoulder-Nappinnai, O Lord now who can fathom you on Earth, in all the sky above? O Maya Lord, O Wonder-Lord O Wonder of the wondrous! The world you made and filled in it, is Maya-filled and Maya-made!
