(791)
ஆனைகாத்தொ ரானைகொன்ற தன்றியாயர் பிள்ளையாய்
ஆனைமேய்த்தி யானெயுண்டி அன்றுகுன்ற மொன்றினால்
ஆனைகாத்து மையரிக்கண் மாதரார்தி றத்துமுன்
ஆனையன்று சென்றடர்த்த மாயமென்ன மாயமே.
பதவுரை
ஆனை காத்து |
– |
கஜேந்த்ராழ்வானைக் காத்தருளி |
அது அன்றி |
– |
அவ்வளவேயல்லாமல் |
ஆயர்பிள்ளை ஆய் |
– |
கோபாலகுமாரனாகி |
ஓர் ஆனை கொன்று |
– |
குவலயாபீடமென்ற ஒரு யானையைக் கொன்று |
ஆனை |
– |
பசுக்களை |
மேய்த்தி |
– |
மேய்த்தருளா நின்றாய்; |
ஆ நெய் |
– |
பசுக்களின் நெய்யை. |
உண்டி |
– |
அமுது செய்யா நின்றாய்; |
அன்று |
– |
இந்திரன் விடாமழை பெய்வித்தகாலத்தில் |
குன்றம் ஒன்றினால் |
– |
கோவர்த்தநமென்ற ஒரு மலையைக் கொண்டு |
ஆனைக் காட்டு |
– |
பசுக்களை ரக்ஷித்து |
மை அரி கண் மாதரார் திறந்து |
– |
மையணிந்து செவ்வரி படர்ந்த கண்ணையுடையளான நப்பின்னைப் பிராட்டிக்காக |
அன்று |
– |
அக்காலத்திலே |
முன்சென்று |
– |
அவளெதிரே நின்று |
ஆனை அடர்ந்த மாயம் எருதுகளேழையுங் கொன்ற ஆச்சரியம் |
||
என்ன மரயம் |
– |
என்ன ஆச்சரியம்! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இரண்டாமடியில், ஆனை= ஆன் ஐ; ஆன்- பசு ஜாதி; ஐ- இரண்டாம் வேற்றுமையுருபு. மேய்த்தி. உண்டி = முன்னிலையொருமை வினைமுற்றுக்கள். மூன்றாமடியில் “ஆனைக்காத்து” என்று ஸந்தியாகவேண்டுமிடத்து ‘ஆனைகாத்து’ என இயல்பாக நின்றது எதுகை நயம் நோக்கியென்க. ஆ என்றும் ஆன் என்றும் நோக்களுக்குப் பெயர்.
English Translation
You saved an elephant in distress, you killed an: elephant in the rut. You came as grazing cowherd lad and ate the stolen white butter. You lifted high the mountain and you stopped the foaming rains above. You killed the bulls in contest for the dark eyed lady Nappinnai!