(790)

(790)

வெற்பெடுத்து வேலைநீர்க லக்கினாய்அ தன்றியும்

வெற்பெடுத்து வேலைநீர்வ ரம்புகட்டி வேலைசூழ்

வெற்பெடுத்த இஞ்சிசூழி லங்கைகட்ட ழித்தநீ

வெற்பெடுத்து மாரிகாத்த மேகவண்ண னல்லையே.

பதவுரை

வெற்பு எடுத்து

மந்தர பர்வதத்தைக்கொண்டு
வேலை நீர்

கடல் நீரை
கலக்கினாய்

கலங்கச் செய்தாய்
அது அன்றியும்

அதுவு மல்லாமல்
வெற்பு எடுத்து

மலைகளைக்கொண்டு
வேலை நீர்

(தெற்குக்) கடலிலே
வரம்பு கட்டி

திருவணையைக்கட்டி
வேலைசூழ்

கடலாலே (அகழாகச்) சூழப்பட்டதாயும்
வெற்பு எடுத்த இஞ்சி சூழ்

மலையான மதினாலே சூழப்பட்டதாயுமுள்ள
இலங்கை

லங்கையினுடைய
கட்டு

அரணை
அழித்த

அழியச் செய்த
நீ

தேவரீர்
வெற்பு எடுத்து

கோவர்த்தனமலையைக் குடையாக வெடுத்து
மாரி காத்த

மழையைத் தடுத்த
மேகம் வண்ணன் அல்லையே

காளமேக நிபச்யாமரன்றோ!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- முதலடியில்,வெற்பு- மந்தரமலை, இரண்டாமடியில்,வெற்பு = பலவகை மலைகள்; கண்டமலையுங்கொண்டன்றோ அணைக்கட்டிற்று. மூன்றாமடியில்,வெற்பு= த்ரிகூட பர்வதம். நான்காமடியில் வெற்பு = கோவர்த்தனமலை.

English Translation

You pulled a rocky mountain high to churn the Milky Ocean-deep. You built a rocky mountain bridge across the Lanka, ocean-deep. You crossed a rocky mountain wall surrounded by the ocean-deep. You held a rocky mountain high O Lord of hue like ocean-deep!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top