(796)

(796)

மண்ணுளாய்கொல் விண்ணுளாய்கொல் மண்ணுளேம யங்கிநின்று

எண்ணுமெண்ண கப்படாய்கொல் என்னமாயைநின்தமர்

கண்ணுளாய்கொல் சேயைகொல்அ னந்தன்மேல்கி டந்தவெம்

புண்ணியாபு னந்துழாய லங்கலம்பு னிதனே.

பதவுரை

அனந்தன் மேல் கிடந்த

திருவனந்தாழ்வான்மேலே  சாய்ந்தருள்கின்ற
எம் புண்ணியா

எங்களுடைய  ஸுக்ருத ஸ்வரூபியான எம்பெருமானே!
புனம் துழாய் அலங்கல்

தன்னிலத்திலே வளர்ந்த திருத்துழாயாலே செய்யப்பட்ட மாலையையுடைய
அம் புனிதனே

பரமபாவகனே!
மண் உளாய்

லீலாவிபூதியில் அவதரித்திரா நின்றாய்;
விண் உளாய்

பரமபதத்தில் எழுந்தருளியிரா நின்றாய்;
மண்ணுள் மயஙகி நின்று எண்ணும் எண் அகப்படாய்

இந்நிலத்திலே விபரீதஜ்ஞாநிகளாயிருக்கிற ஸம்ஸாரிகளுடைய எண்ணங்களுக்கு விஷயமாகாதிருக்கிறாய்;
நின் தமர்

உன்னுடையவர்களான அநந்ய ப்ரயோஜநர்களுக்கு
கண்ணுளாய்

சக்ஷுர்விஷயமாகாநின்றாய்;
சேயை

(மற்றையோர்க்கு) தூரஸ்தனாயிரா நின்றாய்;
என்ன மாயை

இது என்ன ஆச்சரியம்!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “மாலின் நீர்மை வையகம் மறைத்தது என்ன நீர்மையே!” என்று ஸம்ஸாரிகளின் கொடுமையை நினைத்து வருந்தினார் கீழ்ப்பாட்டில். அப்படிப்பட்ட ஸம்ஸாரிகளிலே தாமும் ஒருவராயிருக்கச் செய்தேயும் தாம் அவர்களைப் போலன்றியே எம்பெருமானுடைய பரத்வம், ஸௌலப்பம் முதலிய குணங்களிலே ஈடுபட்டு அவற்றை வாய்வெருவுதலே போதுபோக்காயிருக்கப் பெற்றமை அருளிச் செய்கிறார்.

47. பாட்டு காரொடொத்த.

“மண்ணுவாய்” “விண்ணுளாய்” இத்யாதி பதங்களுக்கு அடுத்தபடியாக உள்ள (சொல்) என்ற இடைச்சொற்களெல்லாம் வாக்யாலங்காரமாக நினைக்கத் தக்கன. ‘மண்ணுளாய், என்ன மாயைகொல்? விண்ணுளாய், என்ன மாயைசொல்?” என்றிங்ஙனே யோஜிக்கவுமாம். அப்ராக்ருதமாய் அதீத்ரியமான திவ்ய மாயைசொல்?” என்றிங்ஙனே யோஜிக்கவுமாம். அப்ராக்ருதமாய் அதீந்த்ரியமான திவ்ய விக்ரஹத்தை ப்ராக்குத ஸஜாதீயமாக்கிக் கொண்டு அவதரித்துக் கண்ணுக்கு விஷயமாக்கா நின்றாய்; ஸம்ஸார நாற்றமே தெரியாத நித்யஸூரிகட்கும் அபரிச்சேத்யனாக விண்ணிலே உள்ளாய்;  ப்ரக்குரதி ஸம்பந்தத்தாலேவந்த விபரீதஜ்ஞாதத்தையுடையராய் ப்ரயோஜநாந்தபாரான ஸம்ஸாரிகள் மநோரதிக்கும் மகோதங்களுக்கு அவிஷயமாயிராநின்றாய்; உன் திருவடிகளிலே அநந்யப்ரயோஜநராயிருப்பார்க்கும் உனது  நிஜஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிப்பியா நின்றாய்; ஆச்ரித விரோதிகள் உன்னை அறியவொண்ணாதே எதிரிட்டு முடிந்துபோம்படி அவர்கட்கு தூரஸ்தனாயிரநின்றாய்; இப்படி பல்வகையாகப்பரந்து நிற்கவல்ல ஆற்றல் உனக்கே உள்ளது- என்று ஈடுபடுகிறார்

English Translation

Are you here on Earth, O Lord or are you in the sky so far? Are you in the countless counts of earthy mortals’ wonder-fare? Are you in the eyes of all the dear devoted holy ones? Are you far from all of this, O Lord reclining in the sea?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top