(79)

(79)

புட்டியில் சேறும் புழுதியும் கொண்டுவந்து

அட்டி யமுக்கி அகம்புக் கறியாமே

சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும்உண்

பட்டிக்கன் றேகொட்டாய் சப்பாணி பற்பநா பாகொட்டாய் சப்பாணி.

பதவுரை

புட்டியில்

திருவரையிற் படிந்த
சேறும்

சேற்றையும்
புழுதியும்

புழுதி மண்ணையும்
கொண்டுவந்து

கொணர்ந்து வந்து
அட்டி

(என்மேல்) இட்டு
அமுக்கி

உறைக்கப் பூசி
அகம்புக்கு

வீட்டினில் புகுந்து
அறியாமே

(எனக்கு நீ) தெரியாதபடி
சட்டி தயிரும்

சட்டியில்  வைத்திருக்கும் தயிரையும்
தடாவினில்

மிடாக்களிலிருக்கிற
வெண்ணெயும்

வெண்ணெயையும்
உண்

உண்ணுகின்ற
பட்டிகன்றே

பட்டி மேய்ந்து திரியும் கன்று போன்றவனே!

சப்பாணி கொட்டாய்-;

பற்பம்  நாபா

ப்ரஜாபதி பிறப்பதற்குக் காரணமான தாமரைப் பூவைக்கொண்ட நாபியையுடையவனே!

சப்பாணி கொட்டாய்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – கண்ணன் புழுதியில் விளையாடும்போது, உடம்பில் வியர்வை நீருண்டாக, அவ்வேர்வை நீரால் நனைந்து புழுதிபடிந்த இடம் சேறாகவும்  நனையாதவிடம் புழுதிமண்ணாகவும் இருக்கும்.  அப்படியே வந்து தன் மேலணைந்தால் அந்தச் சேறும் புழுதியும் தன்மேலும் படிந்துவிடுமாதலால் ‘அட்டி அமுக்கி’ எனப்பட்டது.  பட்டிக்கன்றே – பட்டி தின்றுதிரியும்  கன்றுபோலே  நெய் பால் தயிர்களைக் களவினால் தின்றுதிரிவதையே பொழுதுபோக்காக வுடையவனே! என்றவாறாம்.  பற்பநாபன் – வஉநா

English Translation

O, My little Calf? Smirching the dust and grime of your frame on me you slip inside stealthily and eat all the pots ‘curds and pails‘butter.  Clap your hands, Chappani! O, Padmanabha, clap Chappani.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top