(78)

(78)

தூநிலா முற்றத்தே போந்து விளையாட

வானிலா அம்புலீசந்திரா வாவென்று

நீநிலா நின்புக ழாநின்ற ஆயர்தம்

கோநிலா வக்கொட்டாய் சப்பாணி குடந்தைக் கிடந்தானே சப்பாணி.

பதவுரை

வான்

ஆகாசத்திலே
நிலா

விளங்குகின்ற
அம்புலி

அம்புலியே!
சந்திரா

சந்திரனே!
தூ

வெண்மையான
நிலா

நிலாவையுடைய
முற்றத்தே

முற்றத்திலே
போந்து

வந்து
நீ

நீ
விளையாட

(நான்) விளையாடும்படி
வா

வருவாயாக
என்று

என்று (சந்திரனை அழைத்து)
நிலா

நின்றுகொண்டு
நின்

உன்னை
புகழாநின்ற

புகழ்கின்ற
ஆயர்தம்

இடையர்களுடைய
கே

தலைவராகிய நந்தகோபர்
நிலாவ

மனம் மகிழும்படி

சப்பாணி கொட்டாய்-;

குடந்தை கிடந்தானே! சப்பாணி-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – நீ முற்றத்திலே நின்றுகொண்டு சப்பாணி கொட்ட வேணுமென்கிறாள்.  சந்திரனே! நான் விளையாடும்படி நீ சற்று இப்படி வருவாயாக என்று அழைத்துக்கொண்டே முற்றத்தில் நீ நின்றுகொண்டு நந்தகோபானு மனம் மகிழுமாறு சப்பாணி கொட்டு என்றவாறு.

நின்புகழாநின்ற – உன் சேஷ்டைகளைக் கண்டு மனமகிழ்ந்து உன்னைக் கொண்டாடுகின்ற இடையர்.  ‘நிலா’ என்ற சொல் மூன்றனுள் முதலது – பெயர்ச்சொல்; இரண்டாவது – வினைத்தொகை; மூன்றாவது – ‘செய்யா’ என்னும் வாய்ப்பாட்டு உடன்பாட்டிறந்தகால வினையெச்சம்; ‘நில்லா’ என்பதன் தொகுத்தல்.  நிலாவுதல் – விளங்குதல்

English Translation

Nandagopala stands watching proudly as you call the big moon roaming in the wide sky to come and play with you in the moonlit portico.  Clap Chappani for him, O, Lord of Kudandai, clap Chappani.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top