(77)

(77)

பன்மணி முத்துஇன் பவளம் பதித்தன்ன

என்மணி வண்ணன் இலங்குபொற் றோட்டின்மேல்

நின்மணி வாய்முத் திலங்கநின் னம்மைதன்

அம்மணி மேல்கொட்டாய் சப்பாணி ஆழியங் கையனே சப்பாணி.

பதவுரை

என்

என்னுடைய
மணிவண்ணன்

நீலமணிபோன்ற நிறமுடையவனே!
பல்

பலவகைப்பட்ட
மணி

சதகங்களையும்
முத்து

முத்துக்களையும்
இன் பவளம்

இனிய பவழத்தையும்
பதித்த

அழுத்திச் செய்யப்பட்டதும்
அன்ன

அப்படிப்பட்டதுமான (அழகியதுமான)
இலங்கு

விளங்குகின்ற
பொன்தோட்டின்மேல்

பொன்னாற் செய்த தோடென்னும் காதணியினழகுக்கு மேலே
நின் மணி வாய் முத்து

உன்னுடைய அழகிய வாயிலே முத்துப்போன்ற பற்கள்
இலங்க

விளங்கும்படி (சிரித்துக் கொண்டு)
நின் அம்மைதன்

உன் தாயினுடைய
அம்மணிமேல்

இடையிலிருந்து

சப்பாணி கொட்டாய்-;

ஆழி

திருவாழி மோதிரத்தை
அம்கையனே

அழகிய கையிலுடையவனே!

சப்பாணி-;

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – கீழிற்பாட்டில் பிரார்த்தித்தபடி நந்தகோபர் மடியிலிருந்துகொண்டு சப்பாணிகொட்டின கண்ணனைத் தன்மடியிலேயே வரவிரும்பி யசோதைப் பிராட்டி அழைக்கிறாள்.  அம்மைதன் – தன்மையிற்படர்க்கை.  அன்றி அம்மை என்பதைப் படர்க்கையாகவே கொண்டு நந்தகோபருடைய மடியிலிருந்து சப்பாணி கொட்டுவதைக் காண்பதிலுங்காட்டில் கண்ணனைப் பிள்ளையாகப் பெறும் பாக்கியத்தையுடைய தாயின் மடியிலிருந்து சப்பாணி கொட்டுவதைக் காண்கை நமக்கு மிகவும் உகப்பாயிருக்கையாலே ஆழ்வார் அத்தை அபேக்ஷிக்கிறாராகவுமாம்.  பதித்த + அன்ன = பதித்தன்ன:  பெயரெச்சத்தின் அகரவீறு தொகுத்தல்; பதித்து அன்ன என்றும் பிரிக்கலாம்.  ஆழி – ஸ்ரீஸுதர்சநாழ்வானுமாம்

English Translation

O, My gem-hued One! Over beautiful golden earrings studded with many gems, pearls and coral, your beautiful lips flashing pearly teeth, clap Chappani on your mother’s lap with beautiful hands clap Chappani.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top