(76)

(76)

பொன்னரை நாணொடு மாணிக்கக் கிண்கிணி

தன்னரை யாடத் தனிச்சுட்டி தாழ்ந்தாட

என்னரை மேல்நின் றிழிந்துஉங்க ளாயர்தம்

மன்னரை மேல்கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி.

பதவுரை

பொன்

–

ஸ்வர்ணமயமான
அரை நாணொடு

–

அரைநாணோடுகூட
மாணிக்கம் கிண்கிணி

–

(உள்ளே) மாணிக்கமிட்ட அரைச்சதங்கையும்
தன் அரை

–

தனக்கு உரிய இடமாகிய அரையிலே
ஆட

–

அசைந்துஒலிக்கவும்
தனி

–

ஒப்பற்ற
சுட்டி

–

சுட்டியானது
தாழ்ந்து

–

(திருநெற்றியில்) தொங்கி
ஆட

–

அசையவும்
என் அரை மேல் நின்று

–

என்னுடைய மடியிலிருந்து
இழிந்து

–

இறங்கிப்போய்
உங்கள்

–

உன்னுடைய (பிதாவான)
ஆயர்தம் மன்

–

இடையர்கட்கெல்லாம் தலைவரான நந்தகோபருடைய
அரைமேல்

–

மடியிலிருந்து

சப்பாணி கொட்டாய்-;

மாயவனே

–

அற்புதமான செயல்களை யுடையவனே!

சப்பாணி கொட்டாய்-;

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – கண்ணபிரான் தன் மடியிலிருந்து சப்பாணி கொட்டுவதைப் பார்ப்பதைக் காட்டிலும் தகப்பனார் மடியிலிருந்து சப்பாணி கொட்டுவதைப் பார்த்தால் அவனடைய ஸர்வாங்க  ஸௌந்தர்யங்களையும் கண்ணாரக்கண்டு உகக்கலாமென்பது பற்றி இங்ஙனம் வேண்டினபடி.  உங்கள் – ஒருமையிற்பன்மை எண் வழுவமைதி மன் – பெருமையுடையவனுக்கு ஆகுபெயர்.

English Translation

With a golden band and gem-set bells on the waist chiming and a forehead ornament swaying.  You leave my lap and climb on to your father Nandagopa’s lap.  Clap Chappani.  O wonder-Lord, clap Chappani.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top