(75)

(75)

மாணிக்கக் கிண்கிணி யார்ப்ப மருங்கின்மேல்

ஆணிப்பொன் னால்செய்த ஆய்பொன் னுடைமணி

பேணிப் பவளவாய் முத்திலங்க பண்டு

காணிகொண்ட கைகளால் சப்பாணி கருங்குழல் குட்டனே சப்பாணி.

பதவுரை

ஆணிப்பொன்னால் செய்த

–

மாற்றுயர்ந்த பொன்னால் செய்த
ஆய்

–

(வேலைப்பாட்டிற் குறைவில்லாதபடி) ஆராய்ந்து செய்த
பொன் மணி

–

பொன்மணிக் கோவையை
உடை

–

உடைய
மருங்கின்மேல்

–

இடுப்பின் மேலே
மாணிக்கம் கிண்கிணி

–

(உள்ளே) மாணிக்கத்தை யிட்ட அரைச்சதங்கை
ஆர்ப்ப

–

ஒலி செய்யவும்
பவளம்

–

பவழம்போன்ற
வாய்

–

வாயிலே
முத்து

–

முத்துப்போன்ற பற்கள்
இலங்க

–

விளங்கவும்
பண்டு

–

முற்காலத்திலேயே
காணி

–

பூமியை
கொண்ட

–

(புவிச்சக்ரவர்த்தியினிடத்தில் நின்றும்) வாங்கிக் கொண்ட
கைகளால்

–

திருக்கைகளாலே
பேணி

–

விரும்பி
சப்பாணி

–

சப்பாணிகொட்டியருள வேணும்;
கரு

–

கருநிறமான
குழல்

–

கூந்தலையுடைய
குட்டனே

–

பிள்ளாய்!
சப்பாணி

–

சப்பாணி கொட்டியருள வேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – அரைச்சதங்கைகள் தொனிக்கவும் வாயிலே முத்துப்போன்ற பற்கள் விளங்கவும் திருக்கைகளாலே சப்பாணி கொட்டவேணுமென்கிறார் பிறருடைய காரியம் செய்வதேயன்றோ உன் கைகளுக்குத் தொழில் என்பார் ‘பண்டு காணிகொண்ட கைகளால்’ என்றார்.

English Translation

O, dark dressed One, wearing a beautiful waistband of gold, and jeweled ankle-bells that chime, flashing a pearly smile over charming coral lips! With hands that took the Earth as gift from Mahabali, clap Chappani, come clap you hands, Chappani.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top