(690)
மீன்நோக்கும் நீள்வயல்சூழ் விற்றுவக்கோட் டம்மாஎன்
பால்நோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்
தான்நோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
கோல்நோக்கி வாழும்கு டிபோன்றி ருந்தேனே
பதவுரை
மீன் நோக்கும் |
– |
மீன்களெல்லாம் (தாம் வஸிப்பதற்கு மிகவும் தகுதியான இடமென்று) ஆசையோடு பார்க்கிற (நீர்வளம் மிக்க) |
நீள் வழல் சூழ் |
– |
விசாலமான கழனிகள் சூழ்ந்த |
வித்துவக்கோடு |
– |
திருவித்துவக் கோட்டில் எழுந்தருளியுள்ள |
அம்மா |
– |
பெருமானே! |
என்பால் |
– |
அடியேன் மீது |
நோக்காய் ஆகிலும் |
– |
நீ அருள் நோக்கம் செய்யாதிருந்தாலும் |
உன் பற்று அல்லால் பற்று இலேன் |
– |
உன்னைச் சரணமாகப் பற்றுதலை விட்டு வேறொருவரைச் சரணம் புகமாட்டேன்; |
தார் வேந்தன் |
– |
(குடிகளைக் காப்பதற்கென்று) மாலையணிந்துள்ள அரசன் |
தான் நோக்காது |
– |
(அதற்கு ஏற்றபடி) தான் கவனித்துப் பாதுகாவாமல் |
எத்துயரம் செய்திடினும் |
– |
எப்படிப்பட்ட துன்பங்களைச் செய்தாலும் |
கோல் நோக்கி வாழும் |
– |
அவனுடைய செங்கோலையே எதிர்பார்த்து வாழ்கிற |
குடி போன்று இருந்தேன் |
– |
ஒத்திருக்கின்றேன் |
English Translation
O Lord of Vittuvakkodu, surrounded by tall fields where fish dance in the waters! If you do not turn your glance on me, I have no refuge other than you; just as even if a despotic king pays no attention to his subjects, they still live respecting the authority of his scepter.