(689)
கண்டாரி கழ்வனவே காதலன்றான் செய்திடினும்
கொண்டானை யல்லால றியாக்கு லமகள்போல்
விண்டோய்ம திள்புடைசூழ் விற்றுவக்கோட் டம்மாநீ
கொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே
பதவுரை
விண் தோய் மதில் |
– |
ஆகாயத்தை அளாவிய மதில்கள் |
புடைசூழ் |
– |
எப்புறத்தும் சூழப் பெற்ற |
வித்துவக்கோடு அம்மா |
– |
திருவித்துவக் கோட்டில் எழுந்தருவியிருக்கிற ஸ்வாமிந்! |
காதலன் தான் |
– |
கணவனானவன் |
கண்டார் இதழ்வனவே செய்திடினும் |
– |
பார்ப்பவர்களனைவரும் இகழத் தக்க செயல்களையே செய்தாலும் |
கொண்டானை அல்லால் அறியா |
– |
(தன்னை) மணஞ் செய்து கொண்டவனான அக்கணவனையே யன்றி வேறொருபுருஷனை நினைப்பதுஞ் செய்யாத |
குலம் மகள் போல் |
– |
உயர்நத குலத்துப் பிறந்த கற்புடைய மகள் போல் |
நீ கொண்டு ஆளாய் ஆகிலும் |
– |
என்னை அடிமை கொண்டவனான நீ குறையும் தலைக்கட்டாமல் உபேக்ஷித்தாயாகிலும் |
உன் குரை கழலே |
– |
ஒலிக்கின்ற வீரக்கழலையுடைய உனது திருவடிகளையே |
கூறுவன் |
– |
சரணமாகக் குறிக் கொள்வேன் |
English Translation
O Lord of Vittuvakkodu, surrounded by mansions rising sky-high! If you do not protect me, –your devotee, — I still have no refuge other than your feet; just as even if a husband treats his wife badly, the well-bred wife knows no lover other than her husband.