(688)
தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே
அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே
பதவுரை
விரை குழுவும் |
– |
பரிமளம் விஞ்சிய |
மலர் |
– |
புஷ்பங்களையுடைய |
பொழில் சூழ் |
– |
சோலைகளாலே சூழப்பட்ட |
வித்துவக்கோடு |
– |
திருவித்துவக் கோட்டில் எழுந்தருளியிருக்கிற |
அம்மானே |
– |
ஸ்வாமியே! |
தரு துயரம் |
– |
(நீயே எனக்குத்) தந்த இத்துன்பத்தை |
தடாய் ஏல் |
– |
நீயே களைந்திடா விட்டாலும் |
உன் சரண் அல்லால் சரண் இல்லை |
– |
உனது திருவடிகளை யன்றி (எனக்கு) வேறு புகலில்லை; |
ஈன்ற தாய் |
– |
பெற்ற தாயானவள் |
அரிசினத்தால் |
– |
மிக்க கோபங்கொண்டு அதனால் |
அகற்றிடினும் |
– |
(தனது குழந்தையை) வெறுத்துத் தள்ளினாலும் |
மற்று |
– |
பின்பும் |
அவள் தன் அருள் ஏ நினைந்து அழும் |
– |
அத்தாயினுடைய கருணையையே கருதி அழுகின்ற |
குழவியதுவே |
– |
இளங்குழந்தையையே |
போன்று இருந்தேன் |
– |
ஒத்திரா நின்றேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- வித்துவக்கோடு என்பதற்கு – வித்வான்கள் கூடிய இடம் என்று காரணப் பொருள் கூறுவர். பிள்ளைப் பெருமாளையங்கார் நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் “ திருவிற்றுவக்கோடு சேர்ந்தார் பிறவி கருவிற்றுவக் கோடுங்காண் “ என்றிருப்பதனால், வித்துவக் கோடு அல்ல; விற்றுவக்கோடு என்பர் சிலர். அவ்விடத்திலும் “ திருவித்துவக்கோடு “ என்றே பாடமென்பர் பெரியோர்: இவ்வளவால் எதுகையின்பம் குன்றாது இத்திருமொழியின் ஈற்றுப் பாசுரத்திலும் இங்ஙனமே பாடமாம். இத்திவ்யதேசம் மலைநாட்டில் “ திருமிற்றக் கோடு “ என வழங்கப் படுகின்றது.
English Translation
O Lord of Vittuvakkodu, surrounded by fragrance-wafting flower groves! If you do not help me overcome the obstacles you place in my path, I have no refuge but you again; just as, even if a mother beats her child in a fit of anger, the child cries to be pacified by the mother alone.