(520)

(520)

பேதநன்கறி வார்களோடிவை பேசினால்பெரி திஞ்சுவை

யாதுமொன்றறி யாதபிள்ளைக ளோமைநீநலிந் தென்பயன்

ஓதமாகடல் வண்ணாஉன்மண வாட்டிமாரொடு சூழறும்

சேதுபந்தம் திருத்தினாயெங்கள் சிற்றில்வந்து சிதையேலே

பதவுரை

பேதம்

(உன் பேச்சின்) வாசியை
நன்குஅறிவார்களோடு

நன்றாக அறிய வல்லவரோடு
இவை

இப்பேச்சுக்களை
பேசினால்

பேசினால்
பெரிது இன்சுவை

மிகவும் போக்யமாயிருக்கும்’
யாது ஒன்றும் அறியாத

எவ்வகையான பாவத்தையு மறியமாட்டாத
பிள்ளைகளோமை

சிறுப் பெண்களான எங்களை
நீ நலிந்து என் பயன்

நீ வருத்தமுறுத்துவதனால் என்ன பயன்?
ஓதம்

திரைக்கிளப்பத்தையுடைய
மா கடல்

பெரிய கடலையொத்த
வண்ண

திருநிறத்தையுடைய கண்ணபிரானே!
சேது பந்தம் திருந்தினாய்

திருவணை கட்டினவனே!
உன் மணவாட்டிமாரொடு சூழறும்

உன்னுடைய பத்தினிகளின் மேல் ஆணை’

எங்கள் சிற்றில் வந்து சிதையேல்-

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரான் ஆய்ச்சிகளை நோக்கிக் குறும்பாகச் சில வார்த்தைகளைச் சொல்லிச் சிற்றிலழித்து நலிய, அதுகண்ட அவர்கள், ‘அப்பனே! வார்த்தைகளின் வாசியை அறிய வல்லவர்களிடத்தில் இக்குறும்பு வார்த்தைகளைச் சொன்னால், நீ ஒன்று சொல்ல, அவர்கள் ஒன்பது சொல்ல, மேன்மேல் வார்த்தைகள் பெருகிப் பரமரஸமாய்ச் செல்லும்’ கபடமற்ற வார்த்தைகளின் கருத்தையுமறிய மாட்டாத எங்கள் திறத்தில் அப்பேச்சுக்களைப் பேசி நலிவதனால் உனக்கு என்ன பயனுண்டு?’ என்று சொல்லச் செய்தேயும் அவன் தவிராமல் மேன்மேலுஞ் சிற்றிலை சிதைக்கப் புசு, ‘உன் பெண்டாட்டிகளின் மேலாணை, எம்மை நீ நலியலாகாது’ என்கிறார்கள்.

வாதியேல்- ?????????

(“யாதுமொன்றறியாத” இத்யாதி.) ‘தண்ணீர்’ என்றால் தண்ணீரே கொண்டுவரும்படி பாலைகளாயிருக்கிற எங்களை நெருக்கினால் உனக்கு என்ன பலமுண்டு?” என்ற பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தின் வீறு காண்க. ‘தண்ணீர் கொண்டுவா’ என்றால், ‘கலவி செய்ய வா’ என்று விளிக்கிறான் என்று உணருகையே அறிவின் பயன்போலும்.

‘உன் மணவாட்டியோடு” என்று ஒருமையாகச் சொல்லாமல், “மணவாட்டிமாரொடு” என்று பன்மையாகக் கூறியது-மருநத்திற்படப் பேசும் பேச்சாம்’ ஏகதாரவ்ரத்னா யிருக்கிறவனை நோக்கி, ‘எங்களை யொழிய உனக்கு எத்தனை பேருண்டு’ என்கை மா;மஸ்பர்சியிறே.

சேதுபந்தம் – “***“

English Translation

We are playing in the sand with little round mouthed pots and small winnow plates. Why do you spoil our fun? O Lord of discus, mind you do not touch or kick our castle. Remember, sugar is not sweet when the heart is bitter.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top