(519)

(519)

முற்று இலாத பிள்ளைகளோம் முலை போந்திலா தோமை நாள்தொறும்

சிற்றில் மேல் இட்டுக் கொண்டு நீ சிறிது உண்டு திண்ணென நாம் அது

சுற்றிலோம், கடலை அடைத்து அரக்- கர் குலங்களை முற்றவும்

செற்று இலங்கையைப் பூசல் ஆக்கிய வேகா! எம்மை வாதியேல்.

பதவுரை

கடலை அடைத்து

ஸேதுபந்தம்பண்ணி
அரக்கர் குலங்களை முற்றவும்

ராக்ஷஸருடைய குலங்களை முழுதும்
செற்று

களைந்தொழித்து
இலங்கையை

லங்கையை
பூசல் ஆக்கிய

அமர்க்களப்படுத்தின
சேவகா

வீரப்பாடு உடையவனே!
முற்றிலாத பிள்ளைகளோம்

முற்றாத இளம் பிள்ளைகளாய்
முலை போந்திலாதோமை

முலையும் கிளரப்பெறாத வெங்களை
நாள்தோறும்

நாள்தோறும்
சிற்றில் மேல் இட்டுக் கொண்டு

சிற்றில் விஷயமாக ஒரு வியாஜத்தை வைத்துக்கொண்டு
நீ சிறிது உண்டு

நீ செய்யுஞ் செய்திகள் சில உள’
அது திண்ணன நாம் கற்றிலோம்

அவற்றை நாங்கள் அழகிதாக அப்யஸித்தோமல்லோம்;’
எம்மை வாதியேல்

எங்களை (நீ) துன்பப்படுத்த வேண்டா.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘கண்ணபிரான் இன்னது செய்தான்’ என்று பிறர்க்குச் சொல்லமுடியாதபடி அவன் சில குறும்புகளைச் செய்ய, அது கண்ட ஆய்ச்சிகள், ‘அப்பா! நெஞ்சில் நினைத்தபடி சில செய்யும் அவ்வளவேயோ வேண்டுவது? எங்கள் பருவத்தைச் சிறிது ஆராயவேண்டாவோ? (“முல்லையேப முழுமுற்றும் போந்தில” என்றபடி) கொங்கை இன்னுங் குவிந்தெழுந்திலாத எங்கள் திறத்து நீ செய்யும் குறும்புகளுக்கு நாங்கள் கருத்து அறியும்படி குருகுலவாஸம் பண்ணி ஒன்றுங்கற்றிலோம்’ நீயோ ஒரு பெண்பெண்டாட்டிக்காக வானரப்படை திரட்டிக் கடலில் அணைகட்டி அரக்கர் குலங்களை வேரற வொழித்த மஹாவீரனாயிராநின்றாய்’ அபலைகளான நாங்கள் உன்னுடைய பலத்திற்கு ஈடுகொடுக்கவல்லோமல்லோம்’ ஆகையால், பிரானே! எம்மை நீ நலியாதே கடக்கப்போகவேணு மென்கிறார்கள்.

English Translation

Your words will be sweet when spoken to dainty damsels. Do not waste them on us innocent ones. O Lord of ocean hue, Lord who bridged the ocean strait! Upon your wives we swear, do not break our sand castles.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top