(521)

(521)

வட்டவாய்ச்சிறுகாதையோடு சிறுசுளகும்மணலுங்கொண்டு

இட்டமாவிளையாடுவோங்களைச் சிற்றிலீடழித்தென்பயன்?

தொட்டுதைத்துநலியேல்கண்டாய் சுடர்ச்சக்கரங்கையிலேந்தினாய்

கட்டியுங்கைத் தாலின்னாமை அறிதியேகடல்கண்ணனே.

பதவுரை

சுடர் சுக்கரம்

உன்னுடைய பத்தினிகளின் மேல் ஆணை’
கையில் ஏந்தினாய்

திருக்கையில் தரித்திரா நின்றுள்ள கண்ணபிரானே!

கடல் வண்ணனே! -’

வட்டம் வாய்

வட்டவடிவமான வாயையுடைய
சிறு தூரிதையோடு

சிறிய பானையோடு
சிறு சுளகும்

சிறிய முச்சிலையும்
மணலும் கொண்டு

மணலையும் கொண்டு வந்து
இட்டமா

இஷ்டப்படி
விளையாடுவோங்களை

விளையாடுகிற எங்களுடைய
சிற்றில்

சிற்றிலை
ஈடழித்து

மறுபடியும் உபயோகப் படாதபடி அழிப்பதனால்

என் பயன்? -’

தொட்டு

கையால் தொட்டும்
உதைத்து

காலால் உதைத்தும்
நலியேல் கண்டாய்

ஹிம்ஸியாதொழிகிடாய்’
கைத்தால்

நெஞ்சு கசத்துப் போனால்
கட்டியும்

கருப்புக்கட்டியும்
இன்னாமை

ருசியாது என்பதை
அறிதியே

அறிவாயன்றோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சிற்றிழைப்பதற்குச் சிறுபானையும் முச்சிலும் மணலும் உபகரணங்களென்க. இவற்றைக் கொண்டு விளையாடுகிற வெங்களுடைய சிற்றிலைச் சிதைப்பதனால் உனக்கு என்ன பயன்? என்றதைக் கேட்ட கண்ணபிரான், ‘ஆய்ச்சிகாள்! இச்சிற்றிலை நான் காலாலும் கையாலும் உதைத்துச் சிதைப்பதினால் எனக்கு ஒரு பயனுமில்லை யென்பது மெய்யே உங்களைத் தீண்டுவதன்றோ எனக்குப் பிரயோஜனம்’ என்று அவர்களைத் தீண்ட அது கண்டு ஆய்ச்சிகள், ‘ஹரி, ஹரி! நீ எத்தனை தூரிரஸ்த்ரிகளோடு கலந்துவந்தாயோ தெரியாது, எங்கள் மேல் தீண்டாதே கடக்க நில்’ என்ன’ அதுகேட்ட கண்ணன் ‘நான் ஸர்வேச்வரனல்லேனோ? என்னுடைய ஸ்பர்சம் உங்களுக்கு நலிவாய் விட்டதோ? நான் ஈச்வரனென்பதில் உங்களுக்கு ஸம்வயமுண்டாகில் என் திவ்யாயுதத்தைப் பாருங்கள்” என்று திருக்கையிற் சக்கரந் தோற்ற நின்றான்’ அதுகண்ட ஆய்ச்சிகள் ‘நீ மெய்யே ஈச்வரனாங்கிடாய்’ இப்போது எங்கள் நெஞ்சு உன்மேல் வெறுப்புண்டிருப்பதால் உன்மீது எமக்கு போக்யதை தோற்றவில்லை’ நாக்கு கசத்துப் போனால் கருப்பஞ்சாறும் இனிதாகாதென்னுமிடம் உனக்குத் தெரியுமன்றோ? என்கிறார்கள்.

“கடல் வண்ணனே” என விளித்தற்குக் கருத்து:- கண்டுவிடு மதுக்கு மேற்படச் செய்யலாவதில்லை, ஒருகை யள்ளி முகத்தைக் கழுவுதல் குடித்தல் செய்யவொண்ணாதே கடலில் நீர்’ அப்படியே யன்றோ நீயும் என்கை.

(வட்டவாய்) வட்டம்“***“ என்ற வடசொல் விகாரம், இட்டம் “***“ அறிதி-முன்னிலை6 யொருமை வினைமுற்று.

English Translation

We are playing in the sand with little round mouthed pots and small winnow plates. Why do you spoil our fun? O Lord of discus, mind you do not touch or kick our castle. Remember, sugar is not sweet when the heart is bitter.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top