(461)

(461)

அன்று வயிற்றில் கிடந்திருந்தே அடிமை செய்ய லுற்றிருப்பன்

இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவதுண்டே

சென்றங்கு வாணனை ஆயிரந் தோளும் திருச்சக் கரமதனால்

தென்றித் திசைதிசை வீழச்செற்றாய் திருமாலிருஞ் சோலையெந்தாய்.

பதவுரை

அங்க

சோணித புரத்திற்கு
சென்று

எழுந்தருளி
வாணனை

பாணாஸுரனுடைய
ஆயிரம் தோளும்

ஆயிரந் தோள்களும்
திசை திசை

திக்குகள்தோறும்
தென்றி வீழ

சிதறி விழும்படி
திருச் சக்கரம் அதனால்

சக்ராயுதத்தினால்
செற்றாய்

நெருக்கியருளினவனே!

திருமாலிருஞ்சோலை ஏந்தாய்!

வயிற்றில் கிடந்திருந்து அன்றே

கர்ப்பவாஸம் பண்ணுகையாகிற அன்று முதற் கொண்டே
அடிமை கெய்யல்

(உனக்கக்) கைங்கரியம் பண்ணுவதில்
உற்றிருப்பன்

அபிநிவேசங் கொண்டிருந்த நான்
இன்று

இப்போது
இங்கு வந்து

இத் திருமாலிருஞ்சோலை மலையில் வந்து
உன்னை

(அனைவர்க்கம் எளியனான) உன்னை
கண்டு கொண்டேன்

ஸேவித்துக் கொண்டேன்;

இனி போக விடுவது உண்டே:.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (பத்நீஸம்ச்லேஷத்தில் வேண்டினவடி பாரித்துக்கொண்டிருந்த பிரமசாரி, பின்னை அவளைப்பெற்றால் ஒரு நொடிப்பொழுதும் விட்டுப் பிரிய மாட்டாதாப்போல,) அடியேன் கர்ப்பவாஸம் பண்ணிக்கொண்டிருந்தபோதே உனக்குப்பணி செய்யவேணுமென்று பேரவாக்கொண்டிருந்து, பிறந்தபின்பு நெடுநாள் ஸம்ஸாரத்தி வீடுபாட்டால் உன் அனுபவத்தை இழந்திருந்து-, விஷயாந்தரபரனாய்க் கண்டவிடங்களிலுந் தட்டித் திரிந்துகொண்டு வரும்போது தைவவசமாக இன்ற இத்திருமாலிருஞ்சோலையைக் கிட்டி இங்க உன்னைக் காணப்பெற்ற பின்பு இனி விட்டுக் பிரியமாட்டே னென்கிறார். அடிமை செய்யல் உற்றிருப்பன் – கைங்கரியமே புருஷார்த்தம் என்று துணிந்திருந்தேன் என்றபடி. ‘ அன்றே அடிமை செய்யலுற்றிருப்பன்’ என்றதனால், இன்று அடிமைசெய்ய விரும்புவதில் ஸம்சயலேசமுமில்லையென்பது போதரும்.

English Translation

Even when I was in the womb, I had the desire to serve you; today I have come here and found you, how can I let you go? With your discus you cut asunder the thousand arms of Bana and scattered them far and wide. O Lord of Tirumalirumsolai, O My Master!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top