(462)
சென்றுல கம்குடைந் தாடும் சுனைத்திரு மாலிருஞ் சோலைதன்னுள்
நின்ற பிரான்அடி மேல்அடி மைத்திறம் நேர்பட விண்ணப்பஞ்செய்
பொன்திகழ் மாடம் பொலிந்துதோன்றும் புதுவைக்கோன் விட்டுசித்தன்
ஒன்றினோ டொன்பதும் பாடவல்லார் உல கமளந் தான்தமரே.
பதவுரை
உலகம் |
– |
உலகத்தாரெல்லாரும் |
சென்று |
– |
(தங்கள் தங்களிருப்பிடித்தில் நின்றும்) போய் |
குடைந்து |
– |
அவகரஹித்து |
ஆடும் |
– |
நீராடா நிற்கப்பெற்ற |
சுனை |
– |
தீர்த்தங்களையுடைய |
திருமாலிருஞ்சோலை தன்னுள் |
– |
திருமாலிருஞ்சோலை மலையில் |
நின்ற பிரான் |
– |
எழுந்தருளியிருக்கிற எம்பெருமானடைய |
அடி மேல் |
– |
திருவடிகள் |
அடிமைத்திறம் |
– |
கைங்கரிய விஷயமாக |
பொன் திகழ் |
– |
ஸ்வர்ணமயமாய் விளங்கா நின்ற |
மாடம் |
– |
மாடங்களினால் |
பொலிந்து தோன்றும் |
– |
நிறைந்து விளங்கா நின்ற |
புதுவை |
– |
ஸ்ரீ வில்லிபுத்தூர்க்கு |
கோன் |
– |
தலைவரான |
விட்டு சித்தன் |
– |
பெரியாழ்வார் |
நேர்பட |
– |
பொருந்தும்படி |
விண்ணப்பம் செய் |
– |
அருளிச்செய்த |
ஒன்றினோடு ஒன்பதும் |
– |
இப் பத்துப் பாசுரங்களையும் |
பாட வல்லார் |
– |
பாடவல்லவர்கள் |
உலகம் அளந்தான் தமர் |
– |
திரிவிக்கிரமாவதாரம் செய்தருளின எம்பெருமானுக்குச் சேஷ பூதர்களாகப் பெறுவர் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டுகிறார் இப்பாட்டால். இத்திருமொழியில், “இனிப்போக விடுவதுண்டே” “இனிப்போகலொட்டேன். “ஒளித்திடில் நின்திருவாணைக்கண்டாய்” என்றிப்புடைகளிலே பல சொல்லித்தடுப்பது வளைப்பதாயிருந்தது – ‘நமது கைங்கரியங்களை எம்பெருமான் உடனிருந்து கொள்ளவேணும்’ என்ற விருப்பத்தினாலாதலால், “அடிமைத்திறம் …. விண்ணப்பஞ்செய்” எனப்பட்டது. தன்னடையே வருகைக்கும் நேர்பாடு என்று பெயராதலால், நேர்பட என்பதற்கு, தன்னடையே என்றும் பொருள் கொள்ளலாமென்பர்; ஆயாஸமில்லாம லென்றபடி. ***-***-***-***- என்றார்போல் … (க)
English Translation
The whole world goes to Tirumalirumsolai on pilgrimagem to take a holy dip in its waters. At the feet of the Lord who stands there, this decad of songs is dedicated as a sincere prayer by Vishnuchitta, king of Puduvai town of mansions gleaming with gold. Those who master it will become agents of the Lord who measured the Earth.