(457)

(457)

காலுமெழா கண்ணநீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கிகுரல்

மேலு மெழாமயிர்க் கூச்சுமறாஎன தோள்களும் வீழ்வொழியா

மாலுக ளாநிற்கும் என்மன னேஉன்னை வாழத் தலைப்பெய்திட்டேன்

சேலுக ளாநிற்கும் நீள்சுனை சூழ்திரு மாலிருஞ் சோலையெந்தாய்.

பதவுரை

சேல்

மீன்களானவை
உகளா நிற்கும்

துள்ளி விளையாடுதற்கு இடமான
நீள் சுனை சூழ்

பெரிய தடாகங்களாலே சூழப்பெற்ற
என

என்னுடைய
காலும்

கால்களும்
ஏழா

(வைத்து விடத்தைவிட்டுப்) போகின்றனவில்லை;
கண்ணநீரும்

கண்ணீரும்
நில்லா

உள்ளே தங்குகின்றனவில்லை.
உடல்

சரீரமானது
சோர்ந்து நடுங்கி

கட்டுக்குலைந்து நடுங்கியதனால்
குரலும்

குரலும்
மேல் எழா

கிளம்புகின்றதில்லை;
மயிர் கூச்சும் அறா

மயிர்க்கூச்செறிதலும் ஒழிகின்றதில்லை;
திருமாலிருஞ்சோலை

திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளியிருக்கிற)
எந்தாய்

எம்பெருமானே!

(எனக்கு உன்னிடத்துள்ள அன்பு மிகுதியினால்)

தோள்களும்

தோள்களும்
வீழ்வு ஒழியா

விழுந்துபோவதில் நின்றும் ஒழிந்தனவில்லை ( ஒரு வியாபாரமும் செய்யமுடியாமல் விழுந்தொழிந்தன);
என் மனம்

எனது நெஞ்சானது
மால் உகளா நிற்கும்

வியாமேரஹத்தை அடைந்திரா நின்றது;

(இப்படிகளால்)

வாழ

வாழ்வுறும்படி
உன்னை

உன்னை
தலைப்பெய்திட்டேன்

சேர்ந்துவிட்டேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  மெய்யடியார்கள் பகவத் விஷயத்தில் அவகாஹிக்க வேணுமென்ற நெஞ்சில் நினைத்தபோதே “காலாழும் நெஞ்சழியுங் கண்சுழலும்” என்றபடி ஸர்வேந்திரியங்களுக்கும் சோர்வு பிறக்குமாதலால், அப்படிப்பட்ட நிலைமை எம்பெருமானருளால் தமக்கு வாய்த்தபடியைக் கூறுகிறார், மூன்றடிகளால்; வைத்த அடியை எடுத்துவைத்து நடக்கத் தொடங்கினால், கால் கிளம்புகின்றதில்லை; ஆநந்த பாஷ்பம் இடைவிடாது பெருகாநின்றது; சரீரம் கட்டழிந்து நடுங்காநின்றமையால் வாய்திறந்து ஒரு பேச்சுப்பேச முடியவில்லை; மயிர்க்கூச்சு ஓய்கிறதில்லை; (உன்னைத் தோளாலணைப்போமென்று பார்த்தால்,)  தோள்கள் ஒரு வியாபாரம் பண்ணவும் வல்லமையற்றுச் சோர்வையடைந்தன; நெஞ்சு பிச்சேறிக்கிடக்கிறது.

வீழ்வொழியா என்பதற்கு “நிர்விகாரமாய்” என்றிவ்வளவே பெரிய வாச்சான்பிள்ளை பொருளுரைத்தக்கதாக அச்சுப்பிரதிகளிற் காண்கிறது; அது பொருத்தமற்றது; “நிர்வ்யாபாரமாம்” என்றிருந்ததை, “நிர்விகாரமாய்” எனமயங்கி அச்சிடுவித்தனர் போலும். வீழ்வு-சோர்வு; அது ஒழியாமையாவது -எப்போதும் சோர்வுற்றிருக்கை. அதாகிறது – நிர்வ்யாபாரத்வம். இனி “நிர்விகாரமாம்” என்ற அச்சுப்பிரதிப்பாடத்தை, “நிர்விகாரமாம்”எனத்திருத்திக்கொண்டு, “நிர்வ்யாபாரமாம்” என்ற பாடத்தின் பொருளையே அதற்குக் கொள்ளுதல் பொருந்துமென்னவுமாம். மனமே என்றவிடத்து, ஏகாரம் இசைநிறை.

English Translation

Long stretches have I roamed and floundered with neither shade nor water anywhere. No haven have I found, other than the shadow of your feet. O Lord of Tirumalirumsolai, you went as an emissary of the Pandavas, then spoke a few lies and kindles differences, and stacked corpses in the battle field everywhere, O My Master.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top