(456)

(456)

காதம் பலவும் திரிந்துழன் றேற்குஅங்கோர் நிழலில்லை நீருமில்லைஉன்

பாத நிழலல்லால் மற்றோ ருயிர்ப்பிடம் நான்எங்கும் காண்கின்றிலேன்

தூதுசென் றாய்குரு பாண்டவர்க் காய்அங்கோர் பொய்சுற்றம் பேசிச்சென்று

பேதஞ்செய்து எங்கும் பிணம்படுத்தாய் திருமாலிருஞ் சோலையெந்தாய்.

பதவுரை

குரு

குருவம்சத்திற் பிறந்த
பாண்டவர்க் காண்

பாண்டவர்களுக்காக
ஓர் பொய் சுற்றம் பேசி சென்று

ஒரு பொய்யுறவைப் பாராட்டிக் கொண்டு
அங்கு

துரியோதனாதியரிடத்து
தூதுசென்றாய்

தூதுபோய்
பேதம் செய்து

இரண்டு வகுப்பினர்க்கும் கலஹத்தை மூட்டி

(பின்பு பாரதயுத்தங் கோடித்து அந்த பயத்தில்)

இல்லை

கண்டதில்லை
உன் பாதம் நிழல் அல்லால்

உனது திருவடி நிழலொழிய
எங்கும்

துரியோதனாதியரில் ஒருவர் தப்பாமல்
பிணம் படுத்தாய்

பிணமாக்கி யொழித் தருளினவனே!

திருமாலிருஞ்சோலை எந்தாய்!

காதம் பலரவும்

பலகாத தூரமளவும்
திரிந்து உழன்றேற்கு

திரிந்து அலைந்த எனக்கு
அங்கு

அவ்விடங்களில்
ஓர் நிழல் இல்லை

(ஒதுங்குகைக்கு) ஒரு நிழலுங் கண்டதில்லை;

(அன்றியும்)

நீர்

(காபமாற்றக் கடவதான) தண்ணீரும்
மற்று ஓர்

மற்றொரு
இல்லை

கண்டதில்லை

ஆராய்ந்து பார்த்தவிடத்தில்

உன் பாதம் நிழல் அல்லால்

உனது திருவடி நிழலொழிய
உயிர்ப்புஇடம்

ஆச்வாஸ ஹேதுவான இடத்தை
நான் எங்கும் காண்கின்றி லேன்

நான் ஓரிடத்தும் காண்கிறேனில்லை.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “இலங்கதிமற்றொன்று ………. நலங்கழலவனடி நிழல் தடமன்றி யாமே” என்ற திருவாய்மொழியை ஒக்கும் முன்னடிகள். இந்த ஸம்ஸார பூமிக்குள் கண்ணுக்கும் நெஞ்சுக்கும் எட்டினவிடம் எத்தனை யோஜனை தூரமுண்டோ, அவ்வளவும் அடியேன் தட்டித்திரிந்தாயிற்று; ஓரிடத்திலும் ஒதுங்க ஒருநிழல் பெற்றிலேன்; குடிக்கத்  துளிதண்ணீரும் பெற்றிலேன். (லௌகிகர்கள் ஒதுங்குகிற நிழலும், அவர்கள் பருகும் நீரும் அடியேனுக்கு விஷவ்ருக்ஷத்தின் நிழலாகவும் நச்சுநீராகவும் தோற்றியிராநின்றன.) ஆதலால் உனது திருவடி நிழலைத் தவிர்த்து மற்றொன்றை நான் ப்ராணதாரகஸ்தலமாக நெஞ்சிற்கொண்டிலேன், கண்ணிலுங் காண்கின்றிலேன் என்கிறார். திரிந்து உழன்றேற்கு – உழன்று திரிந்தேற்கு என விகுதிபிரித்துக் கூட்டுதலுமாம். உழல்தல் – ஆயாஸப்படுதல். (உன்பாத நிழலல்லால்) “***-***-***-***-***-***-***-***-***-***-***- என்றது அறிக. உயிர்ப்பு- மூச்சுவிடுதல்.

கீழ்பாட்டில், “இனிப்போ யொருவன்றனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின்சாயையழிவுகண்டாய்” என்று ஆழ்வாரருளிச் செய்தவாறே, எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி, “ஆழ்வீர்! நீ புறம்புபோய் நிற்பது என் சாயைக்கு அழிவானால் ஆகட்டும்; அப்படி நிற்கும்படியாகப் புறம்பே ஓரிடமும் உமக்கு உளதோ?” என்றுகேட்க; வேறு ஓரிடமுங் கிடையாதென்கிறார், இப்பாட்டால்.

(தூதுசென்றாய் இத்யாதி.) “உறவு சுற்றமென்றொன்றிலா வொருவன்” என்கிறபடி ஒருவகைச் சுற்றமுமற்றவனான கண்ணபிரான் பாண்டவர் பக்கலில் பந்துத்துவம் பாராட்டியது- “இன்புற மிவ் விளையாட்டுடையான்” என்றதற்கேற்ப லீலாநுகுணமாக ஆரோபிதாகாரமாதலால் “பொய்ச்சொற்றம்” எனப்பட்டது. ‘பேசிச்சென்று’ என்றது – வார்த்தைப்பாடாய், பாராட்டி என்றபடியென்பர். இனி, பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அச்சுப்பிரதியென்று” என்றொரு வாக்கியங் காணப்படுதலால் அதற்கேற்பப் பொருள் கொள்ளுதலும் ஒன்று; ஆனால், கண்ணபிரான் துரியோதநாதியரை நோக்கி, “எனக்கு உங்களிடத்திலும் பாண்டவர்களிடத்திலும் ஒருநிகரான பக்ஷபாதமே உள்ளது” என்றருளிச் செய்ததாகச் சொல்லப்படுகிற விருத்தாந்தம் பாரதம் முதலிய முதனூற்களிற் காணப்படுகின்றதா என்பது ஆராயத்தக்கது. கண்ணபிரான் தூதுசெல்லும்போது வழியிடையில் விதுரர் திருமாளிகையில் அமுது செய்துவிட்டு வந்தமைகண்ட துரியோதனன், ‘புண்டரீகாக்ஷனே! பீஷ்மரையும் துரோணரையும் என்னையும் ஒரு பொருளாக மதியாமல் ஏதுக்காகப் பள்ளிப் பயலிட்ட சோற்றை உண்டனை?’ என்று கேட்டதற்கு, கண்ணபிரான், ‘எனக்கு உயிர்நிலையாயிராநின்றுள்ள பாண்டவர்கள் திறந்து நீ பகைமைபூண்டிருக்கின்றமையால் எனக்கும் பகைவனாயினை; பகைவனது சோற்றையுண்பது உரிய தாகுமோ? என்று உத்தரங் கூறினதாக மஹாபாரதத்தில் காணப்படுகின்றமையால், அதற்கு விருத்தமாக இங்ஙனே பொய்ச்சுற்றம் பேசினதாகக் கூறப்படுமோ? ஒருகாற் பேசியிருந்தாலும் துரியோதநாதியர் அப்பேச்சை ஏற்றுக் கொள்வரோ? ‘ஒரு க்ஷணத்திற்குமுன் எம்மை நீ பகைவராகப் பேசினாயே’ என்று மடிபிடித்துக் கொள்ளார்களோ? என்று சிலர் சங்கிப்பர்கள்; அதற்குப் பரிஹாரம் வருமாறு:- கண்ணபிரான் துரியோதநாதியரைப் பகைவராகக் கூறியது முதல்முதலாக அவர்களைக் கண்டபோது; பொய்ச்சுற்றம் பேசியது- பிறகு ஸமாதாநம் பேசுங்காலத்தில்; முன்பு பகைவராகச் சொன்ன பேச்சைத் துரியோதநன் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வல்லவனல்லன்; “உன் முகம் மாய மந்திரந்தான்கொலோ” என்றபடி கண்ணபிரானது முகவழகில் மயங்காதாரில்லை ஆதலால், துரியோதனனும் அதில் மயங்கி, முந்தியபேச்சை மறந்துவிடுவான்; ***- ***-  என்று பழிக்கப்புக்கபோதும், “***- ***-  என்று – கண்ணழகில் மயங்கித் தோற்று விளித்தவனிறே துரியோதநனென்பவன். இனி, பன்னியுரைக்குங்காற் பாரதமாம். பேதம் செய்து – ‘பிணங்காதொழியப்பெறில் எங்களுக்கு ஒரூரமையும்’ என்ற பாண்டவர்களை பத்தூர் கேட்கும்படிபண்ணி, அதுவே ஹேதுவாக இரண்டு வகுப்பினர்க்கும் வைரத்தை வளர்த்து அவர்கள் உறவைக் குலைத்து என்றவாறு. அன்றி, ஆச்ரிதரென்றும் அநாச்ரிதரென்றும் இங்ஙனமே ஒரு வாசியைக்கற்பித்து என்று முரைப்பர். பேதம் ***-  என்ற வடசொல் திரிபு. எங்கும்- கண்ணாற் கண்டவிடமெங்கும் என்றுமாம். “கொல்லாமாக்கோல் கொலைசெய்து பாரதப்போர், எல்லாச்சேனையும் இருநிலத்து அவித்தவெந்தாய்” என்ற திருவாய்மொழி இங்க நோக்கத்தக்கது பிணம் – சவம். (ச)

English Translation

I have had the good fortune of serving you. Now if I must go to someone else and stand at his door, will that not belittle your glory? O Lord of Tirumalirumsolai, where the Kurava tribesman harvest tender ears of wild corn and cook fresh food as offering, praising you worthy feet, O My Master!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top