(455)
உனக்குப் பணிசெய் திருக்கும் தவமுடை யேன்இனிப் போய்ஒருவன்
தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கைநின் சாயை யழிவு கண்டாய்
புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டிஉன் பொன்னடி வாழ்கவென்று
இனக்குற வர்புதிய துண்ணும் எழில்திரு மாலிருஞ் சோலையெந்தாய்.
பதவுரை
இனம் குறவர் |
– |
திரள் திரளாய்ச் சேர்ந்துள்ள குறவர்கள் |
புனம் |
– |
புனத்திலுண்டான |
தினை |
– |
தினைகளை |
கிள்ளி |
– |
பறித்து |
புது அவி காட்டி |
– |
(அதை எம்பெருமானுக்குப்) புதிய ஹவிஸ்ஸாக அமுது செய்யப்பண்ணி |
(அதற்காகப் பிரயோஜ நாந்தரத்தை விரும்பாமல்) |
||
உன் பொன் அடி வாழ்க என்று |
– |
“உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு” என்று |
(மங்களாசாஸநம் பண்ணிக்கொண்டு) |
||
புதியது |
– |
புதியதாகிய அத்திணையை |
உண்ணும் |
– |
உண்ணுதற்கு இடமான |
எழில் |
– |
அழகு பொருந்திய |
மாலிருஞ் சோலை |
– |
திருமாலிருஞ் சோலைமலையில் (எழுந்தருளியிருக்கிற) |
எந்தாய் |
– |
எம்பெருமானே! |
உனக்கு |
– |
(சேஷியாகிய) உனக்கு |
பணி செய்து இருக்கும் தவம் உடையேன் |
– |
கைங்கரியம் பண்ணிக் கொண்டிருக்கையாகிற (உனது) அநுக்ரஹத்தைப் பெற்றுள்ள அடியேன் |
இனி |
– |
இனிமேல் |
போய் |
– |
புறம்பே போய் |
ஒருவன் தனக்கு பணிந்து |
– |
ஒரு க்ஷுத்ரபுருஷனைப் பற்றி |
கடைத்தலை |
– |
(அவனுடைய) வீட்டுவாசலில் |
நிற்கை |
– |
(கதிதேடி) நிற்பதானது |
நின் சாயை அழிவு கண்டாய் |
– |
உன்னுடைய மேன்மைக்குக் குறையன்றோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மகரந்தமமர்ந்த அரவிந்தத்தின் சுவையறிந்த வண்டு மீண்டொரு முள்ளிப்பூவைத்தேடி ஓடாதவாறுபோல, உன்னுடைய கைங்கரியாஸமறிந்த அடியேன், இனி மற்றொருவன் வாசலைத்தேடி ஓடமாட்டேன்; அப்படி என்னை நீ ஓடவிட்டால் அது உன்றன் மேன்மைக்கே குறையாமுத்தனை; ஆதலால் அடியேனை நெறிகாட்டி நீக்காது திருவுள்ளம்பற்றி யருளவேணுமென்ற பிரார்த்திக்கின்றமை முன்னடிகளிற் போதருமென்க. தவம் – ***-. ஒரு வன்றனக்குப் பணிந்து – ஒருவன் தன்னைப் பணிந்து என்றவாறு; உருபு மயக்கம். கடை – வாசல்; தலை – ஏழனுருபு. வாசலிலே என்றபடி. சாயை தேஜஸ்ஸு; அதாவது – ஸர்வாதிகத்வம். ஷாயா என்ற வடசொல் திரிந்தது.
கீழ் நான்காம்பத்தில், இரண்டாந்திருமொழியில், இரண்டாம் பாட்டில் “எல்லாவிடத்திலு மெங்கும்பரந்து பல்லாண்டொலி, செல்லாநிற்குஞ் சீர்த்தென்றிருமாலிருஞ் சோலையே” என்றதை விவரிக்கின்றன, பின்னடிகள். இத்திருமலையிலுள்ள குறவர்கள் கொல்லைகளில் வளர்ந்துள்ள தினைக் கதிர்களைப் பறித்து அவற்றைப் பரிஷ்கரித்து எம்பெருமானுக்கு அமுது செய்வித்து, ‘தாங்கள் அநந்யப்ரயோஜகர்’ என்னுமிடம் வெளியாம்படி “உன் செவ்வடி செவ்விதிருக்காப்பு” என்று மங்களாசாஸநம் செய்துகொண்டு, அந்தப் புதிய தினைமாவை உண்பாராம். தினை – ஓர்சாமை. இதனை மாவாக்கி உண்பது குறவர் முதலியோரது சாதியியல்பு. ***-***-***-***-***-***-***- என்பவாகலின், தமக்கு ஏற்ற உணவையே எம்பெருமானுக்கும் இட்டனரென்க. குஹப்பெருமாளுடைய அனுட்டானமும் அறியத்தக்கது. இங்குத் தினை என்ற சொல், அதன்கதிர்களைக் குறிக்கும்; பொருளாகுபெயர். “புனைத்தினைகிள்ளி” என்ற பாடம் சிறக்குமென்க. அவி- ***- என்னும் வடசொல் விகாரம்; தேவருணவு என்பதுபொருள்; அவிக்காட்டி என்றது – எம்பெருமானுக்குப் போஜ்யமாம்படி காட்டி என்றபடி. வாழ்க – வியங்கோள் வினைமுற்று. இனம் – கூட்டம். புதியதுண்கை – கல்யாணச் சாப்பாடாக உண்கை என்றுமாம். … … … … … (ங)
English Translation
Caught you! Now I will never let you go. Lest you disappear through your magical powers, I swear upon the lady of the lotus! You were never true to anyone Lord to Tirumalirumsolai abounding ion springs in which people from town and village throng to bathe and worship to rid themselves of their Karmas, O my Master.