(458)
எருத்துக் கொடியுடை யானும் பிரமனும் இந்திர னும்மற்றும்
ஒருத்தரும் இப்பிற வியென்னும் நோய்க்கு மருந்தறி வாருமில்லை
மருத்துவ னாய்நின்ற மாமணி வண்ணா மறுபிற விதவிரத்
திருத்திஉங் கோயிற் கடைப்புகப் பெய்திரு மாலிருஞ் சோலையெந்தாய்.
பதவுரை
திருமாலிருஞ்சோலை எந்தாய்! |
||
எருது கொடி உடையானும் |
– |
வ்ருஷபத்வஜனான ருத்திரனும் |
பிரமனம் |
– |
(அவனுக்குத் தந்தையான) ப்ரஹ்மாவும் |
இந்திரனும் |
– |
தேவேந்திரனும் |
மற்றும் ஒருத்தரும் |
– |
மற்றுள்ள எந்தத் தேவரும் |
இ பிறவி என்னும் நோய்க்கு |
– |
இந்த ஸம்ஸாரமாகிற வியாதிக்கு |
மருந்து அறிவார் இல்லை |
– |
மருந்து அறிய வல்லவரல்லர்; |
மருத்துவன் ஆய் நின்ற |
– |
(இப்பிறவி நோய்க்கு) மருந்தை அறியுமவனான |
மா மணி வண்ணா |
– |
நீலமணிபோன்ற வடிவையுடையவனே! |
மறு பிறவி தவிர |
– |
(எனக்கு) ஜந்மாந்தரம் நேராதபடி |
திருத்தி |
– |
(அடியேனை) சிக்ஷித்து |
உன் கோயில் கடை புக பெய் |
– |
உன் கோயில் வாசலில் வாழும்படி அருள்புரிய வேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் “உன்னைவாழத் தலைப்பெய்திட்டேன்” என்ற ஆழ்வார் களித்துக் கூறியதைக்கேட்டு எம்பெருமான், “ஆழ்வீர்! உமக்கு அபேக்ஷிதமான புருஷார்த்தம் ஸிக்ருததுஷ்க்ருதங்கள் மாறி மாறி நடக்கும்; இப்படியே ஸம்ஸாரஸாகரத்தில் மூழ்கிக்கிடப்பதற்கு என்னிடத்துக் கைம்முதலுண்டு; அடிக்கடி உனக்குச் சிரமங்கொடாமல் ருத்ராதிதேவர்களை அடுத்து இப்பிறவிநோயைக் கழித்துக்கொள்வோமென்ற பார்த்தால் உன்னையொழிய வேறொருவர்க்கும் பிறவிநோயின் மருந்தை அறிவதற்குரிய வல்லமையில்லை; அதனை அறியுமவன் நீயேயாகையால், அந்நோயை நீக்கி என்னை உன் கோயில் வாசலைக் காக்கவல்ல அடியவனாக அமைத்தருளவேணும்” என்று பிரார்த்திக்கிற படியாய்ச் செல்லுகிறது, இப்பாசுரம்.
எருது+கொடி, எருத்துக்கொடி. மருத்துவன்-வைத்தியன்; இங்க, ஆசாரியன் என்பது உள்ளுறை.“***- ***- ***- ***- ***- ***- ***- ***- ***- ***- ***- ** என்பது அறியற்பாலது. எம்பெருமான் மருந்துமாவன், மருத்துவனமாவன்; “மருந்தும் பொருளு மமுதமுமந்தானே” “அறிந்தனர்நோய்களறுக்கும் மருந்தே” “மருந்தே நங்கள் போகமகிழ்ச்சிக்கென்று, பெருந்தேவர் குழாங்கள் பிதற்றும் பிரனன்” “அருமருந்தாவதறியாய்” என்ற அருளிச் செயல்களை அறிக. உலகத்தில் நோய்க்கு மருந்து வேறு, வைத்தியன் வேறு; அடியாருடைய பிறவி நோய்க்கு மருந்தும் பலகால் கொள்ளப்படவேணும்; வேறுவகை மருந்துகளின் ஸம்பந்தத்தையும் அது ஸஹிக்கும்; பலன் கொடுப்பதில் ஸந்தேஹமும் அதற்குண்டு; இம்மருந்து அங்ஙனன்றியே, ஸக்ருத்ஸேவ்யம்; தன்னைப்போன்ற வேறொரு மருந்தையும் உடைத்தாகாகதது; பலப்ரதாகநத்தில் திண்ணியதுமாம். அந்த மருந்துகள் மலைமேல் வளர்வதுபோல், இதுவும் (திருமாலிருஞ்சோலை) மலையில் வளருவதாம்.
(கோயில் கடைப்புகப்பேய்) “உன் கடைத்தலையிருந்து வாழுஞ் சோம்பர்” என்றவிடத்திற்கு உதாஹரணமாகக் காட்டப்பட்ட திருக்கண்ணமங்கையாண்டான் நிலைமையை அடியேனுக்கு அருள்செய்யவேணும் என்கிறார். “திருக்கண்ணமங்கையாண்டான், ஒரு ஸம்ஸாரி தன் வாசலைப்பற்றிக் கிடந்ததொரு நாயை நலிந்தவனை வெட்டித் தானங் குத்திக்கொண்டபடியைக் கண்டு, ஒரு தேஹாத்மாபிமாநியின் அளவு இதுவானால், பரமசேதநனான ஈச்வரன் நம்மை மயாதிகள் கையில் காட்டிக்கொடானென்று திருவாசலைப்பற்றிக் கிடந்தாரிறே” என்ற திருமாலை வியாக்கியானம் காண்க. பெய்- முன்னிலையொருமை வினைமுற்று.
(இப்பாசுரத்திற்கு சுலோகம் வருமாறு:- )
English Translation
My feet do not steady, my tears do not stop welling, my body trembles weakly, my voice does not rise, my hairs stand on their ends, my shoulders droop, my heart surges with expectation, as I come to you for a new life. O Lord of Tirumalirumsolai surrounded by big lakes of fish dancing waters, O My Master.