(412)

(412)

மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய் வானோர் வாழ

செருவுடைய திசைக்கருமம்திருத்திவந்து உலகாண்ட திருமால்கோயில்

திருவடிதன் திருவுருவும் திருமங்கை மலர்கண்ணும் காட்டி நின்ற

உருவுடையமலர்நீலம் காற்றாட்ட ஓசலிக்கும் ஒளிய ரங்கமே.

பதவுரை

தம்பிக்கு-

சித்திர கூடத்தில் வந்த ப்ரபத்தி பண்ணின) பரதாழ்வானுக்கு
(மலய) பர்வதத்திலுள்ள

ஸ்ரீபாதுகைகளை
வான் பணயம் வைத்து

நன்றாக நம்புசைக்கு உரிய அடாக அளித்து
வானோர் வாழ

தேவர்கள் வாழும்படி
போய்

(சித்திரக் கூடத்தைவிட்டு அவ்வருகே ) எழுந்தருளி
செருஉடைய திசை கருமம்

யுத்தத்துக்கு உரிய தெற்குத்திக்கில் செல்ல வேண்டிய காரியங்களை
திருத்தி

குறையறச்செய்து முடித்துவிட்டு
வந்து

(பிராட்டியுடன் அயோத்திக்கு) எழுந்தருளி
உலகு ஆண்ட

ராஜ்யபரிபாலநம் செய்தருளின
திருமால்

ச்சரியபதி (எழுந்தருளியிருக்கிற)
கோயில்

கோயிலாவது;
திரு அடி தன்

ஸர்வஸ்வாமியான் பெரிய பெருமாளுடைய
திரு உருவும்

திருமேனி நிறத்தையும்
திரு மங்கை

பெரிய பிராட்டியருடைய
மலர் கண்ணும்

மலர்ந்த திருக்கண்ணனின் நிறத்தையும்
காட்டி நின்ற

பிரகாசிப்பியா நின்ற
உரு உடைய

அழகு பொருந்திய
நீலம் மலர்

கறாநெய்தற் பூக்களானவை
காற்று ஆட்ட சலிக்கும்

காற்று அசைக்க அசைக்க கொண்டிருக்கப்பெற்ற
ஒளி

ஒளிபொருந்திய
அரங்கம்

திருவரங்கம்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “ஓசலிக்கும்” என்ற விடத்து, ஓ- உயர்வு சிறப்பு; அசையுமாம் “காட்டிநின்று” என்ற பாடத்தில் செய்யுளோசை குன்றுதலாலும், வியாக்கியாக விரோத முண்டாகையாலும் “காட்டிநின்ற” என்றபாடங் கொள்ளப்பட்டது; “ப்ரகாசிப்பியாநின்ற  அழகையுடைத்தான நீலமலரானது” (தாள் கோசி பாடம்) என்ற ஜீயருரைவாக்கிய மறியத்தக்கது.

இராமபிரான், தன்னை அயோத்திக்கு வந்து முடிசூடி அரசாளுமாறு சித்திரகூடத்திற் பணிந்து வேண்டியன பரதாழ்வானை நோக்கி, ‘தந்தை சொற் பழுதுபடாதபடி பதினான்கு வருடம் வனவாசங்கழித்தன்றி யான் அரசாள மீளமாட்டேன்’ என்றருளிச்செய்ய, பரதன் ‘இனி நாம் நிர்ப்பந்திக்கலாகாது’ என்றிசைந்து, “அடியேனுடைய பாரதந்திரியமே விளங்ககைக்கும், தேவர் மீண்டெழுந்தருளிவீர்; என்று நம்புவதற்கும் அடி ஏன்?” என்று கேட்க, அவ்விரண்டிற்கு முறுப்பாகப் பாதுகைகளை அளித்தரளின படியைக் கூறுவது,  முதலடி. ….. மயமான திருவடி; பாதுகை. பணயம்- அடகு; உலகத்தில் ஒருவர் ஒரு பொருளை மற்றொருவிடத்து அடகுவைப்பது; நம்பிக்கைகாகவாம்; அதுபோல இராமபிரானும் பரதனுடைய நம்பிக்கைக்காக அவனிடத்து இம்மாவடியை வைத்தருளினமையால் “பயணம் வைத்து” என்றார். வான் என்று பெருமையைச் சொன்னபடி; ‘பணயம்’ என்பதன் பொருளின் ஏகதேசமாதகிய நம்பிக்கையில் அப்பெருமைக்கு அந்நயம்; இதனால், உறுதியின் ஏகதேசமாகிய நம்பிக்கையில் அப்பெருமைக்கு அக்வயம்; இதனால், உறுதியான நம்பிக்கையைக்  கூறியவாறு. பணையம் எனினும், பணயம் எனினும் ஒக்கும்.

ராவணாதி ராக்ஷஸலெல்லாரும் கூடிக்கொண்டிருப்பது தென்திசையிலாகலாம், அதனைச் சேருவுடையதிசை என்றார். இத்திசைக்கருமந்திருத்துகையாவது- ஜகஸ்நாதசுவாஸிகளான அரக்கரை அழித்ததும், ஸுக்ரீவனுக்குப் பகையறுத்து அரசாட்சி செய்வித்ததும், *இலஙகை பாழானாகப் படைபொருந்தும் விபீடணனுக்கு அரசித்ததும் முதலியன.

திருவடி என்று- ஸ்வாமிக்குப் பெயர். திருவரங்கச் சோலைகளில் அழகிய கருநெற்தற் பூக்கள் பூத்திருக்கின்றன. வென்னவேண்டுவதை ஒருவகைச் சமத்காரமாகக் கூறுகின்றார்; எம்பெருமானது திருமேனி நிறத்துக்கும், உத்தமஸ்த்ரீகளுடைய கண்களுக்கும் கருத்தெய்தற்பூவை உவமை கூறுவது; கவிமரபு

“திருமங்கை மலர்மகண்ணும்” என்பதற்குப் “பெரிய பிராட்டியாருடைய விநஸியமான திருக்கண்களின நிறத்தையும்” என்று மளவாள மாமுனிகளின் வியாக்கியானமாதலால் ‘மலர்க்கண்’ என்ற பாடம் மறுக்கப்பட்டது. மலர்போன்ற கண் என்று பொருள் கூறப்படின், அப்பாடம் தகும்; (அப்போது, உவமத்+ தாகை.) ‘மலர்ந்தகண்’ என்னும் பொருளில், மலர் என்பது வினைத் தொகையாதலால் ‘மலர்க்கண்’ என்னும் பொருளில், மலர் என்பது வினைத்தொகையாதலால் ‘மலர்க்கண்’ எனக் சகரமிட்டாது, ‘மலர்கண்’ என இயல்வேயாம்; “வளர்பிள்ளை, உயர்தாமரை, உணர்பொருள், தாழ் குழல், ஆழ்கடல்” என்பன காண்க. மலர் நீலம்- “நீலம் மலர்” என மொழிமாற்றிப் பொருள் கொள்க.

English Translation

The shapely blue lily sways in the breeze, reflecting the dark hue of the Lord Ranganatha, and the dark eyes of the lady Ranganayaki in bright Tiru-Arangam, the temple of Tirumal. He is the Lord who left his sandals with his younger brother Bharata as warranty, went Southwards performing mighty deeds and gave succor to the gods, then returned to rule the world.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top