(411)

(411)

பருவரங்க ளவைபற்றிப் படையாலித் தெழுந்தானை

செருவரங்கப் பொருதழித்த திருவாளன் திருப்பதிமேல்

திருவரங்கத் தமிழ்மாலை விட்டுசித்தன் விரித்தனகொண்டு

இருவரங்க மெரித்தானை ஏத்தவல்லா ரடியோமே.

பதவுரை

பருவரங்கள் அளை பற்றி

–

பிரமன் முதலியோரிடத்துப்பெற்ற பெரியவரங்களைப் பலமாகக் கொண்டு
படை ஆலித்து எழுந்தானை

–

யுத்த விஷயமாகக் கோலாஹலஞ் செய்து வெளிப்புறப்பட்ட இராவணனை
செரு

–

யுத்தத்திலே
அரங்க

–

ஒழியும்படி
பொருது

–

போர் செய்து
அழித்த

–

ஒழித்தருளின
திருஆளகர்

–

(வீர்யமாகிற) லக்ஷ்மியைத் தனக்கு நிருபகமாக உடையனான எம்பெருமானுடைய
திருப்பதி மேல்

–

(திருவங்கமென்னும்) திருப்பதிவிஷமாக
விட்டுசித்தன்

–

பெரியாழ்வார்
விரித்தன

–

அருளிச்செய்த
திரு அரங்கம் தமிழ் மாலைகொண்டு

–

(பாட்டுத்தோறம்) ‘திருவரங்கம்’ என்கிற திருநாமத்தையுடைய தமிழ் மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையுங்கொண்டு.
இருவர் அங்கம் மெரித்தானை

–

(மதுகைடபர்களாகிற) இருவருடைய உடலைத்  (திருவனந்தாழ்வானுடைய மூச்சு வெப்பத்தினால்) கொளுத்திப் போகட்ட எம்பெருமானை
எத்தவல்லார்

–

துதிக்கவல்லவர்களுக்கு
அடியோம்

–

அடிமை செய்யக்கடவோம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “தீதிலாத வொண்டமிழ்க ளிவையிரத்துளிப்பத்தும், ஓத வல்லபிராக்கள் நம்மை ஆளுமையார்கள் பண்டே” என்று- தம் அருளிச்செயலைக் கற்பார்க்குத் தாம் அடிமைசெய்வதாக அருளிச்செய்த நம்மாழ்வாரைப்போல, இவ்வாழ்வாரும் இப்பத்தையும் ‘கற்பார்க்கு’ அடிமை செய்யப்பெறுவோம் யாமென்கிறார்.

வரங்கள் அவை = அவை- முதல் வேற்றுமைச் சொல்லுருபு படை என்று சேனைக்கும் பெயர். யுத்தத்துக்குப் பெயர். ஆலிப்பு- கோலாஹலம். அரங்கல் – அழிதல். (இருவரங்கமேரித்தானை.) “ஏய்ந்த பணக்கதிரமேல் வெவ்வுயிர்ப்ப- வாய்ந்த மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்” என்றது காண்க. தமிழ் மாலை கொண்டு வந்தவல்லார்” என இபையும்    ..    …    .. (க0)

English Translation

This decad of songs by Vishnuchitta sings of Tiru-Arangam the abode of the auspicious Lord who destroyed the boon-intoxicated Ravana and the twin Rakshasas Madhu-Kaitabha with his discus. Those who master in are our masters.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top