(3654)

(3654)

இன்கவி பாடும் பரம கவிகளால்,

தன்கவி தான்தன்னைப் பாடுவி யாது,இன்று

நன்குவந் தென்னுட னாக்கியென் னால்தன்னை,

வன்கவி பாடுமென் வைகுந்த நாதனே.

 

பதவுரை

என் வைகுந்த நாதன்

பரமபதநாதனை எம்பெருமான்

இன் கவி பாடும் பரம கவிகளால்

மதுரமான கவிகளைப்பாடவல்ல முதலாழ்வார்களைக் கொண்டு

தன் கவி தான் தன்னை பாடுவியாது

தனக்குத் தகுதியான பாசுரங்களைத்தான் பாடுவித்துக்கொள்ளாமல்

இன்று நன்கு வந்து என் உடன் ஆக்கி

இப்போது எனக்கருள் செய்யவேணுமென்று வந்து என்னைக் கருவியாகக்கொண்டு

என்னுல்

என் வாயிலாக

தன்னை வன் கவிபாடும்

தன் விஷயமான சிறந்த பாசுரங்களைப் பாடிக்கொள்கிறன்!.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தனக்குச் சில பாசுரங்கள் வேணுமானால் அவற்றைப் பாடவல்ல மஹாகவிகள் பலருமுண்டே; வ்யாஸபராசரவால்மீகிப்ரப்ருதிகளான மஹர்ஷிகளும்  முதலாழ்வார்களுமுண்டாயிருக்க, அவர்களைக்கொண்டு கவி பாடுவித்துக்கொள்ளாதே என்னைக் கருவியாகக்கொண்டு கவி பாடுவதே யென்று தலைசீய்க்கிறார்.

இன் கவிபாடும் பரமகவிகளென்பதற்கு ஸம்ஸ்க்ருத கவிகளையும் அர்த்தமாகக் கொள்வர். வ்யாஸபராசரவால்மீகிப்ரப்ருதிகளான வடசொற் கவிவரர்களும், முதலாழ்வார்கள் திருமழிசைப்பிரான் போல்வாரான செந்தமிழ்க் கவிவரர்களுமுண்டாயிருக்க, அவர்களைக்கொண்டு தனக்கு வேண்டிய பிரபந்தங்களை எவ்வளவும் பாடுவித்துக் கொள்ளலாமே; அது செய்யாதே என்னைக்கொண்டு கவி பாடுவித்துக்கொள்ளுமதுவே ப்ரயோஜநமாக வந்து தான் ஸ்ரீவைகுண்டநாதனை பெருமையை எனக்குத் தோற்றுவித்து, வைகுந்தநாதனென்று என் வாயினற் சொன்னலொழியத் தன்னை வைகுண்டநாதனக நினையாதவனய், என் பாட்டினலேயே தனக்கு வைகுண்டநாதத்வம் ஸித்தித்ததாக நினைக்குமவனய் இப்படி பாடுவித்துக் கெதண்டானே, இது என்ன நீர்மை! என்று உருகுகிறார்.

மூன்றாமடியில், நன்கு வந்து, என்றும், நன்கு உவந்து என்றும் பிரிப்பர்.

 

English Translation

My Lord of Vaikunta has preferred to blend with me and sing his praise.  He did not choose worthy poets of great words and merit for this

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top