(3653)

(3653)

சீர்கண்டு கொண்டு திருந்து நல் லின்கவி,

நேற்பட யான்சொல்லும் நீர்மை யிலாமையில்,

ஏர்விலா என்னைத்தன் னாக்கிஎன் னால்தன்னை,

பார்பரவு இன்கவி பாடும் பரமரே.

 

பதவுரை

சீர் கண்டு கொண்டு

பகவத்குணங்களை அவகாஹித்து

திருந்து நல்இன் கவி

திருத்தமுற்று விலக்ஷ்ணமாய் மதுரமான பாசுரங்களை

யான் நேர்படசொல்லும் நீர்மை இலாமையில்

நேர்த்தியாகப் பாடுகைக்குரிய சக்தி எனக்கில்லாமையாலே

ஏர்வு இலா என்னை தன்னாக்கி

தகுதியற்ற வென்னைத் தன்னோடொக்கக் கடாக்ஷித்து

என்னால்

அப்படி கடாக்ஷிக்கப் பெற்ற அடியேனைக் கொண்டு

தன்னை

தன் விஷயமாக

பார் பரவு இன் கவிபாடும் பமர்

நிலவுலகம் முழுதும் கொண்டாடும்படி யான இனிய பாசுரங்களைப்பாடும்; பரமபுருஷராயிரா நின்றார்!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தன்னைக் கவிபாடுகைக்குத் தக்க ஆற்றலும் ஆசையுமில்லாதிருந்த வென்னைக்கொண்டு, உலகமெல்லாங் கொண்டாடும்படியான பாசுரங்களைப் பாடுவித்துக் கொண்டானே! என்ன ஸர்வேச்வரனோ வென்கிறார். எம்பெருமான் விஷயமாகக் கவிபாடவேணுமானால் முந்துற முன்னம் அவனுடைய திருக்கல்யாண குணங்களைக் கண்டுகொள்ள வேணுமே; கடல் போன்ற அக்குணங்களில் ஒரு திவலையும் கண்டறிந்கவனல்லனே நான் என்கிறார். குணஜ்ஞானமில்லையாகிலும், கட்டளைப்பட்டு லக்ஷணோபேதமான கவியை யியற்றும் பெற்றியாவது இருக்கக் வேணுமே; அதுவுமில்லை யெனக்கு.  இவை யில்லாமையாலே கவி பாடுகைக்குத் தகுதியற்றவன் நான். இப்படிப்பட்ட வென்னை தன்னைப்போலே ஹேயப்ரத்யநீகத்வ ஸர்வஜ்ஞத்வாதி குணவிசிஷ்டனாக்கி என்னைக்கொண்டு இப்பாசுரங்களினாலேயே தன்னைப் பராத்பரனாக அபிமானிக்கின்றானே! என்று உள் குழைகின்றார்.

இரண்டாமடியின் முடிவில் ‘நீர்மையிலாமையில்” என்பதற்கு ‘யோக்யதையில்லாமலிருக்கச் செய்தேயும்’ என்று பொருள். அன்றிக்கே இதனை ஏழாம் வேற்றுமையாகக் கொண்டு, நீர்மையிலாமையில் ஏர்விலாவென்னை—யோக்யதையின் அபாவத்தில் ஒப்பற்றிருக்கிறவென்னை என்று பொருள் கொள்ளவுமாம். ஒப்பற்ற அயோக்யனை யென்றபடி. இது ஆறாயிரப்படி நிர்வாஹம்.

 

English Translation

He made me his and through me, song sweet songs that the worlds praise. I only uttered empty words, while he filled them with meaning

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top